உலகெங்கிலும் பரவியிருக்கும் கொரோனா தொற்று காரணமாக கிரிக்கெட் தொடர்கள் அனைத்தும் தள்ளிவைக்கப்பட்டுள்ளன அல்லது ரத்து செய்யப்பட்டுள்ளன.
என்றபோதிலும் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மற்றும் ஸ்வாஷ் பக்கிங் பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித், இந்திய ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை தற்போதைய வீரர்களில் சிறந்த பீல்டராக தேர்வு செய்துள்ளார்.
31 வயதான இவர் சமீபத்தில் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் தனது ரசிகர்களுடன் கேள்வி பதில் அமர்வில் ஈடுபட்டார். இந்த அமர்வின் போது, பின்தொடர்பவர்களில் ஒருவர் ஸ்மிதைப் பொறுத்தவரை சிறந்த தற்போதைய பீல்டருக்கு பெயரிடுமாறு கேட்டார்.
அதற்கு பதிலளித்த ஸ்மித் தனது அணியினர் எவரையும் தேர்வு செய்யாமல் வெளிநாட்டு வீரரான ஜடேஜாவை தேர்வு செய்தார்.
இதற்கிடையில், மற்றொரு பயனர் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேனிடம் இந்திய விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் மகேந்திர சிங் தோனியை ஒரே வார்த்தையில் விவரிக்குமாறு கோரினார். இதற்கு பதில் அளித்த ஸ்மித் "லெஜண்ட்! மிஸ்டர் கூல்" என்று விவரித்தார்.
இது மட்டுமல்லாமல், இந்திய கேப்டன் விராட் கோலி பற்றி ஸ்மித்திடம் ஒரு வார்த்தை கூற கேட்டபோது., அதற்கு பதிலளித்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர், “ஃப்ரீக்!” என்று குறிப்பிட்டார்.
கடந்த மாதம், ஆஸ்திரேலியாவின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக், ஜடேஜாவை இந்தியாவின் சிறந்த பீல்டராக அறிவித்தார். இந்நிலையில் தற்போது ஸ்மித்தும் அதே பெயரை மீண்டும் உச்சரித்துள்ளார்.
மார்ச் 29 முதல் மே 24 வரை நடைபெறவிருந்த 2020 IPL போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வழிநடத்த ஸ்மித் தயாராக இருந்தார், ஆனால் COVID-19 ஐ அடுத்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) காலவரையின்றி போட்டிகளை ஒத்திவைத்தது.
மறுபுறம், ஜடேஜா லாபகரமான டி20 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்காக விளையாடவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.