t20 World Cup: கோப்பையை தட்டி சென்றது ஆஸி., மகளிர் அணி!
டி20 மகளிர் உலக கோப்பை போட்டியில் நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றது ஆஸி., அணி!
டி20 மகளிர் உலக கோப்பை போட்டியில் நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றது ஆஸி., அணி!
6_வது மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மேற்கு வங்க தீவுகளில் நடைபெற்று வருகிறது. சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் இன்று அதிகாலை நடைப்பெற்ற இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. ஆரம்பம் முதலே தடுமாற்றத்துடன் விளையாடிய இங்கிலாந்து வீராங்கனைகள் அடுத்தடுத்து பெவிலியன் திறும்ப, 19.4 ஓவரில் அனைத்து விக்கெட்டினையும் இழந்து 105 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக டேணில்லா வெயிட் 43(37), ஹெதர் நைட் 25(28) ரன்கள் குவித்தனர். மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்னுடன் வெளியேறினர். ஆஸி., தரப்பில் கிராண்டர் 3 விக்கெட்டுகளை குவித்தார்.
இதனையடுத்து 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸி., களமிறங்கியது. ஆரம்பம் முதலே அதிரடி விளையாட்டை வெளிப்படுத்திய ஆஸி., வீராங்கனைகள் ஹெல்லி 22(20), மூனி 14(15) ரன்களில் வெளியேற தொடர்ந்து களமிறங்கிய கிராண்டர் 33(26), மெக் லேர்னிங் 28(30) ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் ஆட்டத்தில் வெற்றியினை உறுதி செய்தனர். ஆட்டத்தின் 15.1-வது பந்தில் வெற்றி இலக்கினை எட்டிய ஆஸி., 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அணியின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்த அஷ்லைட் கிராண்டர் ஆட்ட நாயகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் ஆஸி., தனது நான்காவது டி20 உலக்கோப்பையினை பெற்றுள்ளது.