இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான போட்டியின் நிலவரத்தை தெரிந்துக்கொள்ள Scorecard  கிளிக் செய்யவும் 



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

3:55 PM 11/27/2020
#AUSvIND இந்தியா 25 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. வெற்றி பெற 195 ரன்கள் தேவை



India vs Australia: இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்டத் தொடரின் முதல் ஒருநாள் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் பேட்டிங் தேர்வு செய்தார்.  14 ஓவர்களுக்குப் பிறகு, இந்தியா 4 விக்கெட்டுக்கு 104 ரன்கள் எடுத்தது.


இதனையடுத்து களம் ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 374 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஆரோன் பிஞ்ச் (Aaron Finch) மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இருவரும் சதம் அடித்தனர். பிஞ்ச் 124 பந்துகளில் 114 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரின் மூன்றாவது பந்தில் ஸ்மித்தை இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷமி அவுட் செய்தார். ஸ்மித் 66 பந்துகளில் 105 ரன்கள் எடுத்தார். ஸ்மித் தனது 10 வது ஒருநாள் சதத்தை 62 பந்துகளில் அடைந்தார். 


பிஞ்ச் மற்றும் ஸ்மித் (Steven Smith) தவிர, க்ளென் மேக்ஸ்வெல் 19 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். டேவிட் வார்னர் 76 பந்துகளில் 69 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்திய தரப்பில் முகமது ஷமி (Mohammed Shami) அதிக விக்கெட் எடுத்தார். 10 ஓவர்களில் 59 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜஸ்பிரீத் பும்ரா, நவ்தீப் சைனி, யுஸ்வேந்திர சாஹல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.


ALSO READ | India vs Australia Series 2020-21 Schedule: இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடர்களின் முழு அட்டவணை


ஆஸ்திரேலியா அணி 375 ரன்கள் என்ற இலக்கை இந்தியாவுக்கு வழங்கியது. 375 ரன்கள் என்ற இலக்கைத் துரத்த இந்திய வீரர்கள் ஆட்டத்தை தொடங்கினார்கள். ஷிகர் தவான் மற்றும் மாயங்க் அகர்வால் முதல் ஐந்து ஓவர்களில் 53 ரன்கள் எடுத்தனர். மாயங்க் அகர்வால் 16 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார். தவான் 15 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார்.


ஜோஷ் ஹேஸ்வுட் மாயங்க் அகர்வாலின் விக்கெட்டை வீழ்த்தினார்:
ஆறாவது ஓவரின் இரண்டாவது பந்தில் இந்தியாவுக்கு முதல் அடி கிடைத்தது. மயங்க் அகர்வால் 18 பந்துகளில் 22 ரன்கள் எடுத்த பின்னர் பெவிலியனுக்கு திரும்பினார். ஜோஷ் ஹேஸ்லூட்டின் பந்தில் கேட்ச் அவுட் ஆனார். அவருக்கு அடுத்து விராட் கோலி கிரீஸில் இருந்தார். 6 ஓவர்களுக்குப் பிறகு, இந்தியா ஒரு விக்கெட்டுக்கு 54 ரன்கள் எடுத்தது. 


இந்தியா 3 பந்துகளில் 2 விக்கெட்டுகளை இழந்தது:
இந்திய அணி பந்தை 3 பந்துகளில் விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரின் 2 முக்கியமான விக்கெட்டுகளை இழந்தது. 10 வது ஓவரின் இரண்டாவது பந்தில் ஜோஷ் ஹேஸ்லூட் விராட் கோலியை (Virat Kohli) அவுட் செய்தார். கோஹ்லி 21 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார். அவருக்கு பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர் வந்தார். இருப்பினும், அவர் பெருசா அதுவும் எதுவும் செய்ய முடியவில்லை. மற்றும் 2 ரன்கள் எடுத்து பெவிலியனுக்கு திரும்பினார். அலெக்ஸ் கேரியின் 10 வது ஓவரின் நான்காவது பந்தில் அஅவர் அவுட் ஆனார். அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் வந்தார்.


ALSO READ | விராட் கோலி இரண்டு பேருக்கு சமம் என்று புகழ்பாடும் Glenn McGrath


ஜம்பா இந்தியாவுக்கு நான்காவது அதிர்ச்சியைக் கொடுத்தார்:
டீம் இந்தியா 14 வது ஓவரில் நான்காவது பின்னடைவை சந்தித்தது. ஆடம் ஜம்பா ஓவரின் மூன்றாவது பந்தில் ஸ்டீவ் ஸ்மித்தின் கைகளில் ராகுல் அடித்த பந்து சிக்கியது. ராகுல் 15 பந்துகளில் 12 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் ஹார்திக் பாண்டியா களத்திற்கு வந்தார். ஷிகர் தவான் 28 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து கிரீஸில் உள்ளார். 14 ஓவர்களுக்குப் பிறகு, இந்தியா 4 விக்கெட்டுக்கு 104 ரன்கள் எடுத்தது.


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR