INDvsAUS: கடைசி ஒருநாள் போட்டி இந்தியா வெற்றி... தோனி அபாரம்
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரை இந்திய அணி வென்றது.
16:16 18-01-2019
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. முதல் முறையாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் தொடரை வென்றுள்ளது.
16:09 18-01-2019
தோனி மற்றும் ஜாதவ் விளையாடி வருகின்றனர். கடைசி இரண்டு ஓவர்.... வெற்றி பெற 14 ரன்கள் தேவை. கேதர் ஜாதவ் தனது நான்காவது அரை சதத்தை பூர்த்தி செய்தார்.
15:58 18-01-20
மூன்றே ஓவர்.... வெற்றி பெற 27 ரன்கள் தேவை
03:49 PM 18-01-2019
46 ஓவர்கள் முடிந்த நிலையில் இந்தியா 198 ரன்களை குவித்துள்ளது. வெற்றிப்பெற 24 பந்தில் 33 ரன்கள் குவிக்க வேண்டும்.
15:36 18-01-2019
15:32 18-01-2019
15:22 18-01-2019
15:22 18-01-2019
தோனி மற்றும் ஜாதவ் விளையாடி வருகின்றனர். இந்தியா வெற்றி பெற 54 பந்தில் 60 ரன்கள் தேவை
15:16 18-01-2019
தோனி மற்றும் ஜாதவ் விளையாடி வருகின்றனர். இந்திய அணி 40 ஓவருக்கு மூன்று விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்துள்ளது. வெற்றி பெற 60 பந்தில் 66 ரன்கள் தேவை\
15:11 18-01-2019
விராட் கோலி 46(62) ரன்கள் எடுத்து அவுட் ஆனார்
01:10 PM 18-01-2019
10 ஓவர்கள் முடிந்த நிலையில் இந்தியா 26 ரன்களை மட்டும் குவித்து தத்தளித்து வருகிறது. தொடக்க வீரராக களமிறங்கிய ரோகித் ஷர்மா 9(17) ரன்களில் வெளியேறிய நிலையில், தற்போது விராட் கோலி, ஷிகர் தவான் நிதானமான ஆடத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தற்போது - 12 ஓவர்கள் | 1 விக்கெட் | 39 ரன்கள்
களத்தில் - ஷிகர் தவான் 16(35) | விராட் கோலி 14(20)
11:49 AM 18-01-2019
230 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது ஆஸ்திரேலியா... ஆட்டத்தின் 48.4-வது பந்தில் ஆஸ்திரேலியா அணி தனது 10-வது விக்கெட் (பில்லி ஸ்டெங்கல் 0(2)) விக்கெட்டை இழந்தது.
இந்தியா தரப்பில் யுவேந்திர சாஹல் 6 விக்கெட், புவனேஷ்வர் குமார், மொகமது ஷமி தலா 2 விக்கெட்டுகளை குவித்தனர்.
இதனையடுத்து 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்குகிறது.
11:31 AM 18-01-2019
219 ரன்கள் குவித்த நிலையில் 8 விக்கெட்டுகளை இழந்து தவிக்கும் ஆஸ்திரேலியா அணி....
தற்போது - 45.5 ஓவர்கள் | 219 ரன்கள் | 8 விக்கெட்
களத்தில் - ஜாம்ப்பா 7(9)
10:29 AM 18-01-2019
123 ரன்களுக்கு 5-வது விக்கெட்டை இழந்தது ஆஸ்திரேலியா...
தற்போது - 32 ஓவர்கள் | 128 ரன்கள் | 5 விக்கெட்
களத்தில் - பீட்டர் ஹேண்ஸ்கோம்ப் 17(23) | மேக்வெள் 8(9)
10:05 AM 18-01-2019
அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டை இழந்தது ஆஸ்திரேலியா,..
தற்போது - 24 ஓவர்கள் | 4 விக்கெட் | 101 ரன்கள்
களத்தில் - பீட்டர் ஹேண்ஸ்கோம்ப் 1(2) | மார்க்கஸ் ஸ்டோனிக்ஸ் 0(2)
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் இறுதி போட்டி இன்று மெல்பரன் கிரிக்கெட் மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது. இப்போட்டியல் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சு தேர்வு செய்து விளையாடி வருகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது இந்தியா விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவும், இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றது. இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலை பெற்றது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது. இப்போட்டியில் வெல்லும் அணி தொடரை வெல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய நிவரப்படி முதலில் பேட்டிங் செய்துவரும் ஆஸ்திரேலியா 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள் குவித்துள்ளது. கவாஜ்ஜா 25(42), மார்ஸ் 31(43) ரன்களுடன் களத்தில் உள்ளனர். இந்தியா தரப்பில் புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.