மெல்போர்ன்: மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்று ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடர் அக்டோபரில் நடத்த விருந்ததாக ஆஸ்திரேலிய (Australia) கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்தது. இந்த டி 20 தொடரின் போட்டிகள் டவுன்ஸ்வில்லே, கெய்ர்ன்ஸ் மற்றும் கோல்ட் கோஸ்ட்டில் முறையே அக்டோபர் 4, 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்தன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த தொடர் டி 20 உலகக் கோப்பைக்கு முன்னதாக இரு அணிகளுக்கும் நல்ல பயிற்சியாக இருக்க வேண்டும் என போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டன. ஆனால் உலக சுகாதார நெருக்கடி காரணமாக டி 20 உலகக் கோப்பை தொடரை கடந்த மாதம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது இரு கிரிக்கெட் வாரியங்களும் மூன்று ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடதை ஒத்திவைக்க முடிவு செய்தன.


ALSO READ  | யார் சிறந்த கேப்டன் எம்.எஸ் தோனி அல்லது ரிக்கி பாண்டிங்? ஷாஹித் அப்ரிடி பதில்


"வெஸ்ட் இண்டீஸ் (West Indies) அணியுடன் சேர்ந்து, அக்டோபர் மாதம் குயின்ஸ்லாந்தில் திட்டமிடப்பட்ட இருபது ஓவர் தொடரை ஒத்திவைக்க நாங்கள் ஒப்புக் கொண்டுள்ளோம்" என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளது.


"ஐ.சி.சி டி 20 உலகக் கோப்பைக்கு (ICC T20 World Cup) முன்னதாக நடக்கவிருந்த, இந்த மூன்று போட்டிகள் கொண்ட தொடர், 2021 அல்லது 2022 ஆம் ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் மறு திட்டமிடப்பட்ட டி 20 உலகக் கோப்பைடியின் போது நடத்தபப்டும்" எனவும் கூறப்பட்டு உள்ளது. 


செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவுள்ள 13 வது ஐபிஎல் (13th IPL) போட்டியில் இரு நாட்டை சேர்ந்த சிறந்த வீரர்கள் பங்கேற்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


ALSO READ  | IPL 13 சீசன் UAE-ல் நடைபெறுவது உறுதி!! கொண்டாட்டத்துக்கு தயாராகும் ரசிகர்கள்!!


ஞாயிற்றுக்கிழமை தொடங்கவிருந்த ஜிம்பாப்வேக்கு எதிரான ஆஸ்திரேலியாவின் ஒருநாள் தொடர் ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


ஆஸ்திரேலியாவின் அடுத்த தொடர் செப்டம்பர் தொடக்கத்தில் இங்கிலாந்து (England) சுற்றுப்பயணமாகும். ஆனால் அந்த தொடரும் உண்மையில் நடைபெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.


செப்டம்பர் மாதத்தில் தென்னாப்பிரிக்கா மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தை கடந்த வாரம் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. ஏனெனில் இந்த அணிகளின் வீரர்கள் ஐ.பி.எல். தொடரில் விளையாட உள்ளார்கள்.


ALSO READ  | ICC 2023 உலகக் கோப்பைக்கான சூப்பர் லீக் தகுதியை அறிவிப்பு, விதிகள் என்ன?


செப்டம்பர் மாதம் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம், தென்னாப்பிரிக்கவுடன் (South Africa) இரண்டு டெஸ்ட் அல்லது 5 டி-20 போட்டிகளை நடத்த திட்டமிட்டிருந்தது.