சாதனை: ஆஸ்திரேலிய ஓபன் காலிறுதியில் பெடரர் மற்றும் ஜோகோவிச்
ரொஜர் பெடரர் மற்றும் நோவக் ஜோகோவிக் இருவரும் ஆஸ்திரேலிய ஓபன் காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
மெல்போர்ன்: மார்டன் ஃபுசோவிக்ஸை வீழ்த்தி 15 வது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் காலிறுதிப் போட்டி சுற்றுக்கு ரொஜர் பெடரர் (Roger Federer) நுழைந்துள்ளார். அதேபோல உலகின் நம்பர் 2 இடத்தில் இருக்கும் நடப்பு சாம்பியனான நோவக் ஜோகோவிக் (Novak Djokovic) காலிறுதிக்குள் நுழைந்துள்ளார். அதே நேரத்தில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் உலக நம்பர் ஒன் வீராங்கனை ஆன ஆஸ்திரேலியாவின் ஆஷ்லீ பார்ட்டியும் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் நான்காவது சுற்றுப் போட்டியின் இரண்டாவது செட்டில் ஜோகோவிச், அர்ஜென்டினாவின் 14-ம் நிலை வீராங்கனை டியாகோ ஸ்வார்ஸ்மானை 6-3, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார். இதுவரை ஒரு செட் கூட இழக்காத ஜோகோவிச் காலிறுதியில் மிலோஸ் ரவுனிச்சை எதிர்கொள்வார். கிராண்ட்ஸ்லாம் போட்டியில் 46 வது முறையாக காலிறுதிக்கு முன்னேறியுள்ளார் ஜோகோவிச்.
பெடரர், ஹங்கேரியின் மார்டன் ஃபுக்சோவிக்ஸுக்கு எதிரான முதல் செட்டை இழந்து அதிர்ச்சியூட்டினார். அதன் பிறகு சுதாரித்துக்கொண்ட அவர் 57 வது முறையாக கிராண்ட்ஸ்லாம் காலிறுதிப் போட்டிக்கு சென்றார். அவர் 4-6 6-1 6-2 6-2 என்ற செட் கணக்கில் வென்றார்.
பெண்கள் பிரிவில், முதல் நிலை வீராங்கனை ஆஸ்திரேலிய வீரர் பார்தி 6-3, 1-6, 6-4 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் 18-ம் நிலை வீராங்கனை அலிசன் ரிஸ்கேவை தோற்கடித்தார். அவர்கள் இப்போது செக் குடியரசின் 27 வது சீட் பெட்ரா க்விடோவாவை எதிர்கொள்வார்கள். மூன்று செட் போட்டியில் குயிடோவா 6-7 (4/7), 6-3, 6-2 என்ற செட் கணக்கில் கிரேக்கத்தைச் சேர்ந்த 22-ம் நிலை வீராங்கனை மரியா சக்கரியை தோற்கடித்தார்.
அமெரிக்காவின் பதினைந்து வயதான கோகோ கோஃப் பயணமும் நான்காவது சுற்றுடன் நின்றது. அவர் இறுதியில் 6-7 (5/7), 6-3, 6-0 என்ற கணக்கில் சோபியா கெனினிடம் தோற்றார்.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.