ஆஸ்திரேலியா ஓபன்: செரினா வில்லியம்ஸ் சாம்பியன்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் 2-ம் நிலை வீராங்கனை செரீனா வில்லியம்சும் அவரது சகோதரியும் 13-ம் நிலை வீராங்கனையுமான வீனஸ் வில்லியம்சும் மோதினர்.
விக்டோரியா: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் 2-ம் நிலை வீராங்கனை செரீனா வில்லியம்சும் அவரது சகோதரியும் 13-ம் நிலை வீராங்கனையுமான வீனஸ் வில்லியம்சும் மோதினர்.
பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் வீனஸ் வில்லியம்ஸை 6-4,6-4 என்ற நேர் செட் கணக்கில் செரினா வில்லியம்ஸ் தோற்கடித்து ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் சாம்பியன் பட்டம் வென்றார்.
செரினா வில்லியம்ஸ் பெறும் 23-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும். கிராண்ட்ஸ்லாம் பட்டங்களில் அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவின் மார்க்ரெட் கோர்ட் 24-வது பட்டங்களை வென்று முதலிடத்தில் உள்ளார். இன்னும் ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றால் செரினா வில்லியம்ஸ் உலக சாதனையை சமன் செய்வார்.