மார்ச் 26 ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் மும்பையில் பிரம்மாண்டமாக தொடங்குகிறது. இந்தமுறை மொத்தம் 10 அணிகள் களம் காண உள்ளன. இன்னொரு கூடுதல் தகவல் என்னவென்றால், இந்த தொடரில் சுமார் 11 ஆண்டுகளுக்குப் பிறகு அதிரடி வீரர் ஒருவர் களம் காண்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

யார் அந்த வீரர்?


ஆஸ்திரேலியாவின் மேத்யூ வேட் 11 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் போட்டிக்கு திரும்பியுள்ளார். இம்முறை குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக களம் இறங்குகிறார். கடைசியாக 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் விளையாடிய அவருக்கு, அந்த தொடர் சிறப்பாக அமையவில்லை. டெல்லி டேர்டேவில்ஸ் அணிக்காக 3 போட்டிகளில் மட்டுமே களமிறங்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. 3 போட்டிகளிலும் சேர்த்து 22 ரன்கள் எடுத்திருந்தார்.


மேலும் படிக்க | இந்தியாவில் நடைபெறப்போகும் 3 உலக கோப்பை போட்டிகள்!


குஜராத் டைட்டன்ஸ் 


விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் என்பதால் அவருக்கு ஏலத்தில் மிகப்பெரிய டிமாண்ட் இருந்தது. கடைசியாக குஜராத் டைட்டன்ஸ் அணி 2 கோடியே 40 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது. இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிக் கொண்டிருந்த மேத்யூ வேட், ஐபிஎல் ஏலத்தில் ஏலம் எடுக்கப்பட்டவுடன், கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் இருந்து உடனடியாக விலகினார். 



முதல் போட்டி


ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியில் களமிறங்கும் மேத்யூ வேட், 11 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்துள்ள வாய்ப்பு சரியாக பயன்படுத்திக் கொள்ள காத்திருக்கிறார். மேத்யூ வேட், அண்மைக்காலமாக ஆஸ்திரேலிய அணிக்கு மிகச்சிறப்பாக விளையாடி வருகிறார். ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் உலகக்கோப்பை வெற்றி பெற்றபோது, பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதிப்போட்டியில் 19வது ஓவரில் 3 சிக்சர்களை விளாசி அணிக்கு வெற்றியைத் தேடி தந்தார்.  அதுவும் பாகிஸ்தானின் நட்சத்திர பந்துவீச்சாளரான ஷாகின் அப்ரிடி பந்துவீச்சில் இந்த 3 சிக்சர்களையும் மேத்யூ வேட் விளாசியிருந்தார். 


மேலும் படிக்க | அடுத்த ஆண்டு முழுவதும் இந்திய அணி விளையாட உள்ள போட்டி விவரங்கள்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR