பாருங்கள்:- பெண் வீச்சாளர் சுழற்பந்தில் உமர் அக்மல் போல்ட்!!
சமீபத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு கல்வி அறிவு போதாது என்று அந்த நாட்டின் கிரிக்கெட் வாரிய தலைவர் ஷகாரியார் கான் கூறினார். அவரின் கருத்தை உறுதிப்படுத்துவது போல் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
நடந்து முடிந்த 2016-ம் ஆண்டின் ஐ.பி.எல். இறுதி ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி பட்டம் வென்றது. அந்த அணியின் கேப்டன் டேவிட் வார்னருக்கும் மற்ற வீரர்களுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முக்கிய பேட்ஸ்மேனான உமர் அக்மல் டேவிட் வார்னரை பாராட்டி ஒரு டுவிட் செய்திருந்தார். அந்த டுவிட்டில் ''வார்னர் மற்றும் அணி வீரர்களுக்கு வாழ்த்துக்கள். இந்த வெற்றிக்கு நீங்கள் தகுதியானவர்கள் #பி.சி.எல்.2016பைனல்'' என்று குறிப்பிட்டிருந்தார். ஐ.பி.எல். என்று குறிப்பிடுவதற்கு பதிலாக பி.சி.எல். (பாகிஸ்தான் சூப்பர் லீக்) என்று குறிப்பிட்ட அக்மலில் தவறை டுவிட்டர்வாசிகள் கலாய்த்து எடுத்துவிட்டார்கள். இதனை அடுத்து உமர் அக்மல் தனது டிவிட்டை மாற்றி #ஐ.பி.எல்.2016பைனல் என்று வெளியிட்டார்.
மேலும் அக்மல் நார்வேவில் நடைபெற்ற இரண்டு மகளிர் அணிகளுக்கு இடையலான போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். போட்டியின் கடைசியில் அக்மல் பேட்டிங் செய்ய இஸ்மா அகமது என்ற பெண் சுழற்பந்து வீச்சாளர் பந்து வீச அக்மல் போல்ட் ஆனார். அந்த பெண் சுழற்பந்து வீச்சாளர் நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி. ஒரு பெரிய கிரிகெட் வீரரை நான் அவுட் செய்துடேன் என்றார்.
அந்த வீடியோ பாருங்கள்:-