இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அறு நாடுகள் கலந்துகொள்ளும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறத. இந்திய அணி தான் ஆடிய 2 போட்டிகளில் முறையே பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங்கை வென்று சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அதேபோல் பாகிஸ்தானும் நேற்று ஹாங்காங்கை வீழ்த்தியதன் மூலம் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியிருக்கிறது. இன்று நடக்கவிருக்கும் முதல் சூப்பர் 4 சுற்றில் ஆப்கானிஸ்தான் - இலங்கை அணிகள் மோதுகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாளை நடக்கவிருக்கும் சூப்பர் 4 சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. முக்கியமான இந்தப் போட்டி மீது உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனம் குவிந்திருக்கிறது. இதில் வெற்றி பெறுவதற்காக இரண்டு அணிகளும் மும்முரமாக மோதும் என்பதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.


 



சூழல் இப்படி இருக்க, இந்திய அணியின் ஆல் ரவுண்டர்களில் ஒருவரான ரவீந்திர ஜடேஜா முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆசிய கோப்பையில் இருந்து விலகியுள்ளார். ஜடேஜாவுக்கு பதிலாக அக்சர் படேல் சேர்க்கப்பட்டுள்ளார் என பி.சி.சி.ஐ. அறிக்கை வெளியிட்டுள்ளது.


முன்னதாக பாகிஸ்தானுடனான முதல் போட்டியில் ரவீந்திர ஜடேஜா சிறப்பாக விளையாடி 29 பந்துகளில் 35 ரன்கள் எடுத்திருந்தார். பேட்டிங்கில் மட்டுமின்றி பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்து துறைகளிலும் ஜடேஜா அணிக்கு சிறப்பான பங்களிப்பை அளிக்கக்கூடியவர்


.



அதனால், சூப்பர் 4 போன்ற முக்கியமான போட்டிகளில் ஜடேஜா போன்ற வீரர்கள் முக்கியமானவர்கள். ஆனால் தற்போது அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அணிக்கு அது பெரும் பின்னடைவாக இருக்குமென்றே கருதப்படுகிறது.


மேலும் படிக்க | இந்தியாவை சந்திக்க தயாராக இருக்கிறோம் - பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான்


இருப்பினும் அக்சர் பட்டேலும் பௌலிங், பேட்டிங்கில் நன்றாக செயல்படுவார் என்பதால் அவர் ஜடேஜாவின் ரோலை சிறப்பாக செய்வார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்திருக்கிறது.


 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEata