கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு கெட்ட செய்தி, ஆசிய கோப்பை ரத்து செய்யப்படுவதாக சவுரவ் கங்குலி அறிவித்தார்
கொரோனா வைரஸ் (Coronavirus) தொற்றுநோய் காரணமாக இந்த ஆண்டு ஆசிய கோப்பை ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் தலைவர் சவுரவ் கங்குலி (Sourav Ganguly) தெரிவித்தார்.
கொல்கத்தா: கொரோனா வைரஸ் (Coronavirus) தொற்றுநோய் காரணமாக ஆசிய கோப்பை இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் (Board of Control for Cricket in India) தலைவர் சவுரவ் கங்குலி (Sourav Ganguly) இன்று (புதன்கிழமை) தெரிவித்தார். இன்ஸ்டாகிராம் பேசிக்கொண்டு இருந்த போது கங்குலி, இந்த தகவலை தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "ஆசியா கோப்பை (Asia Cup 2020) ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையில், இந்தியாவின் முதல் சர்வதேச தொடர் எது என்று சொல்வது கடினம். நாங்கள் எங்கள் தரப்பில் அனைத்து ஏற்பாடுகளையும் முடித்திருந்தோம், ஆனால் அரசாங்கத்தின் விதிகளின்படி எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. வீரர்களின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை இருப்பதால் நாங்கள் அவசரப்படவில்லை. நாங்கள் ஒவ்வொரு மாதமும் விஷயங்களை மதிப்பாய்வு செய்கிறோம்.
இந்த செய்தியும் படிக்கவும் - BCCI தலைவர் சவுரவ் கங்குலி பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள்...!
இந்த செய்தியும் படிக்கவும் - இலங்கை vs இந்தியா இடையிலான தொடர்ந்து ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு!
முன்னதாக ஐ.ஏ.என்.எஸ். ஊடகத்தின் செய்திபடி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு (Pakistan Cricket Board) பொருந்தக்கூடிய சாளரம் இந்திய வாரியத்திற்கு ஏற்றதல்ல என்பதை பிசிசிஐ (BCCI) தெளிவுபடுத்தி உள்ளது. அதேநேரத்தில் ஆசியா கோப்பை (Asia Cup 2020) செப்டம்பர் அல்லது அக்டோபரில் நடைபெறும் என்று பிசிபி (PCB) தலைமை நிர்வாகி வாசிம் கான் தெரிவித்தார். ஆம், ஆசிய கோப்பை இந்த ஆண்டு செப்டம்பரில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் அதை இலங்கையில் நடத்த பிசிபி ஒப்புக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.