டோனி-யின் விஸ்வரூபம் வீணானது; இறுதி பந்தில் தோற்றது CSK!
IPL 2019 தொடரின் 39-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 1 ரன் வித்தியாசதில் வெற்றி பெற்றது!
IPL 2019 தொடரின் 39-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 1 ரன் வித்தியாசதில் வெற்றி பெற்றது!
IPL 2019 தொடரின் 39-வது லீக் ஆட்டதிதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. பெங்களூரு சின்ன சாமி மைதானத்தில் நடைப்பெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை முதலில் பந்து வீச்சு தேர்வு செய்து விளையாடியது.
இதனையடுத்து முதலாவதாக பேட்டிங் செய்த பெங்களூரு அணி வீரர்கள் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் குவித்தது. அணியில் அதிகபட்சமாக பார்த்திவ் பட்டேல் 53(37) ரன்கள் குவித்தார். இதனையடுத்து 162 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது.
ஆரம்பம் முதலே தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை வீரர்கள் போட்டியின் வெற்றியை பெங்களூரு வசம் ஆக்கினர். எனினும் இறுதி பந்துவரை போராடி பொறுப்பாக விளையாடிய அணித்தலைவர் டோனி 84*(48) ரன்கள் குவித்தார். ஒரு கட்டத்தில் 28 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தவித்த சென்னை அணி அம்பத்தி ராயுடு - டோனியின் கூட்டணியில் சற்று மீண்டது, ஆனால் ராயுடு 29(29) ரன்களுக்கு வெளியேற இவரை தொடர்ந்து வந்த வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களுடன் வெளியேறி அணியின் வெற்றியை கைவிட்டனர்.
இறுதி ஓவரில் 26 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் 3 சிக்ஸர் மற்றும் 1 நான்கு விலாசிய டோனி இறுதி பந்தில் ஒரு ரன் எடுக்க முடியாமல் தோல்வியை தழுவியது ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தியது.
இதன் மூலம் பெங்களூரு அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் பெங்களூரு அணி நடப்பு தொடரின் 3-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.