ஆசிய கிரிக்கெட் அணிகள் பங்கேற்கும் ஆசிய டி20 கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணியை வீழ்த்தி வங்கதேச அணி கோப்பையை தட்டிச் சென்றது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆசிய கண்டத்தில் இருக்கும் நாடுகளுக்கு இடையே நடத்தப்படும் கிரிக்கெட் கோப்பை போட்டியான ஆசிய கிரிக்கெட் கோப்பை போட்டிகள் தற்போது நடைப்பெற்று வருகிறது. இந்தியா, வங்கதேசம், பாக்கிஸ்தான், இலங்கை, தாய்லாந்த், மலேசியா ஆகிய 6 அணிகள் மோதின.


இத்தொடரின் இறுதிப்போட்டி இன்று கோலாலம்பூர் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைப்பெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்து விளையாடியது.



இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி, ஆரம்பம் முதலே தடுமாற்றத்தினை சந்தித்து வந்தது. தொடக்க வீராங்கனைகள் மித்தாலி ராஜ் 11(18), சிம்ரித்தி 7(12) என சொற்ப ரன்களில் வெளியேறினர். எனினும் அணி தலைவி கரூர் 42 பந்துகளில் 56 ரன்களை குவித்து அணிக்கு பலம் சேர்த்தார். இதனால் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 112 ரன்களை குவித்தது.


இதனையடுத்து 113 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம் அணி நிதானமாக விளையாட தொடங்கியது. எனினும் வீராங்கனைகள் வந்த வேகத்தில் சென்றுகொண்டிருந்தனர். மிகவும் பரபரப்பாக சென்ற இந்த ஆட்டத்தின் இறுதி பந்தில் 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வங்கதேசம் வெற்றி இலக்கான 113 ரன்னை எட்டியது. 


வங்கதேச அணித்தரப்பில் சுல்தானா 27(24) மற்றும் ருமானா ஹகமது 23(22) ரன்கள் குவித்தனர்.


இதனையடுத்து ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசம் வென்றதாக அறிவிக்கப்பட்டது.