இலங்கை அணிக்கு எதிரான 20 ஓவர் போட்டி பிப்ரவரி 24 ஆம் தேதி லக்னோவில் தொடங்குகிறது. மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் அந்த அணிக்கு எதிரான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. விராட் கோலி மற்றும் ரிஷப் பன்ட் ஆகியோருக்கு 20 ஓவர் தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக கே.எல்.ராகுல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் இலங்கை தொடரில் பங்கேற்கவில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | INDvsSL: இந்த 3 வீரர்களுக்கு இது கடைசி டெஸ்ட் தொடராக இருக்கலாம்!


வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஓய்வளிக்கப்பட்டிருந்த பும்ரா அணிக்கு திரும்புகிறார். காயத்தால் கடந்த சில மாதங்களாக ஓய்வெடுத்து வந்த ரவீந்தர் ஜடேஜா இலங்கை தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். அதேபோல், சஞ்சு சாம்சனுக்கும் 20 ஓவர் தொடருக்கான இந்திய அணியில் மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் தொடருக்கான இந்திய அணிக்கு கேப்டனாக ரோகித் சர்மா அறிவிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து மோசமாக விளையாடி வந்த புஜாரா மற்றும் அஜிங்கியா ரஹானே ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. 



இதேபோல் இஷாந்த் சர்மா மற்றும் விருதிமான் சஹா ஆகியோரும் இந்திய அணியில் இடம்பெறவில்லை. அவர்களுக்கு பதிலாக இந்திய டெஸ்ட் அணியில் ஹனுமா விஹாரி மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் மிடில் ஆர்டரில் களமிறங்க உள்ளனர். கே.எல்.ராகுல் இல்லாததால் ரோகித் சர்மாவுடன் மயங்க் அகர்வால் டெஸ்ட் போட்டியில் ஓபனிங் களமிறங்க உள்ளார். 


மேலும் படிக்க | Age Fraud: ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் வயது மோசடி செய்தாரா? ஐபிஎல்லில் விளையாடுவாரா?


இலங்கை தொடருக்கான இந்திய அணி


20 ஓவர்; 


ரோஹித் சர்மா (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா, ஜஸ்பிரிட் பும்ரா, புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், சஞ்சு சாம்சன், ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், பிஷ்னோய், குல்தீப் யாதவ் மற்றும் அவேஷ் கான்


டெஸ்ட்; 


ரோஹித் சர்மா (கேப்டன்), மயங்க் அகர்வால், பிரியங்க் பஞ்சால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி, ஷுப்மன் கில், ரிஷப் பந்த், கே.எஸ். பாரத், ஆர்.அஷ்வின் (உடல்தகுதியை பொறுத்து), ரவீந்திர ஜடேஜா, ஜெயந்த் யாதவ், குல்தீப், ஜஸ்பிரித் பும்ரா (துணைக்கேப்டன்), முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், சௌரப் குமார்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR