2020 இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL) லீக் கட்டத்திற்கான முழு அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த அறிவிப்பின் படி, மார்ச் 29-ஆம் தேதி வான்கடே ஸ்டேடியத்தில் நான்கு முறை கோப்பை வென்றவர்களும், நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் இடையே முதல் போட்டி நடைபெறவுள்ளது.


"VIVO இந்தியன் பிரீமியர் லீக் 2020-க்கான கால அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அறிவிக்கிறது. இந்த சீசன் 2020 மார்ச் 29 அன்று மும்பையின் வான்கடே ஸ்டேடியத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இடையே நடைபெறும் போட்டியின் மூலம் துவங்குகிறது. தொடரின் இறுதி போட்டியானது மே 24, 2020 அன்று விளையாடப்படும்" என்றும் BCCI செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


முதல் முறையாக, சீசன் ஆறு பிற்பகல் ஆட்டங்களை மட்டுமே கொண்டிருக்கும், மேலும் போட்டிகள் 57 நாட்களுக்கு நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


IPL 2020 லீக் நிலை போட்டிகளின் முழு அட்டவணை மற்றும் நேரம் கீழே கொடுக்கப்படுள்ளது.



2020 IPL போட்டிக்கான பிளேஆப் அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும், தொடரின் இறுதி போட்டி மே 24 அன்று நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.