Ind VS Eng: இங்கிலாந்தில் கொரோனா அச்சுறுத்தலில் இந்திய அணி - மீளுமா?
இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் இருக்கும் இந்திய அணியில், கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஒரே டெஸ்ட் போட்டி ஜூலை 1 முதல் தொடங்க உள்ள நிலையில் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
ரோகித் சர்மாவுக்கு கொரோனா
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, லீசெஸ்டர்ஷைர் அணிக்கு எதிரான 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்றது. இப்போட்டியில் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி களமிறங்கியது. முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய அவர், 2வது இன்னிங்ஸில் ஓப்பனிங் இறங்கவில்லை. அவருக்கு பதிலாக இளம் வீரர் கே.எஸ்.பரத் ஓப்பனிங் இறங்கினார். அப்போது, அவர் ஏன் களமிறங்கவில்லை என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பிசிசிஐ, கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டிருப்பதாகவும், தற்போது அவர் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | ஐபிஎல் பார்க்க பாக்.,கிரிக்கெட்டரை அழைத்த கங்குலி
டெஸ்டில் விளையாடுவாரா?
சனிக்கிழமை மாலை ரோகித் சர்மாவுக்கு ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உடனடியாக அவர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அதற்குள் குணமடைந்து விடுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இப்போதைய சூழலில் ரோகித் சர்மா, இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்குவது சந்தேகம் என கூறப்படுகிறது.
அஸ்வின் - விராட் கோலிக்கு கொரோனா
இங்கிலாந்து தொடருக்கு இந்தியஅணி கிளம்புவதற்கு முன்பே சுழற்பந்துவீச்சாளர் அஸ்வினுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர், உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவர்களின் அறிவுரையின்பேரில் சிகிச்சை எடுத்துக் கொண்டார். நலமான பின்னர் இங்கிலாந்து சென்று அணியினருடன் இணைந்து கொண்டார். இங்கிலாந்து சென்ற பிறகு விராட் கோலிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு பயிற்சி ஆட்டத்தில் கலந்து கொண்டார். அடுத்தடுத்து இந்திய வீரர்கள் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாவது ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | IND vs ENG: புஜாரா அவுட்டை கொண்டாடிய இந்திய வீரர்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR