இந்திய கிரிக்கெட் வீரகளுகான தர நிலை பட்டியலை நேற்றைய தினம் BCCI வெளியிட்டது, இதில் டோனியை விட இளைய வீரர்கள் அவரைவிட அதிகமான சம்பளம் வாங்கும் பட்டியலில் இடம்பெற்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து விளக்கம் கேட்டனர். இந்நிலையில் தற்போது BCCI  இதற்கான விளக்கத்தினை தெளிவுபடுத்தியுள்ளது.


முன்னதாக நேற்று உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட BCCI-க்கான நிர்வாக கமிட்டி அறிவித்துள்ளதன் படி, இந்திய கிரிக்கெட் அணி வீரர், வீராங்கனைகளுக்கான புது சம்பள விவரம் அறிவிக்கப்பட்டது.


இந்த சம்பள பட்டியளானது அக்டோபர் மாதம் 2017 முதல் செப்டம்பர் 2018 வரையிலான காலத்திற்கானது எனவும், இந்த பட்டியளின்படி A+ தர வீரர்களுக்கு 7 கோடி சம்பளம் எனவும், A தர வீரர்களுக்கு 5 கோடி எனவும், B மற்றும் C தர வீரர்களுக்கான சம்பளம் ஆனது முறையே 3 மற்றும் 1 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது.



இதில் புதிதாக அறிமுகப் படுத்தப்பட்ட A+ தர பட்டியலில், டோனியை விட இளைய வீரர்களான கோலி, ரோகித் ஷர்மா, ஷிகர் தவான், புவனேஷ்வர் குமார் மற்றும் புமாரா இடம் பெற்றுள்ளனர். ஆனால் டோனிக்கு இரண்டாம் தர நிலையான A கிரேட் ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் தடம் பதித்த புமராவுக்கு A+ தரமும் டோனிக்கு A தர நிலையும் ஒதுக்கப்பட்டது பெரம் பரபரப்பினை ஏற்படுத்தியது.


இதனையடுத்து இதுகுறித்து BCCI தெரிவிக்கையில்... டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என மூன்று பிரிவிலும் பங்கேற்பவராகவும், ICC தரவரிசையில் முதல் 10 இடத்தை பெற்று இருப்பவர்களுக்கு மட்டுமே A+ ஒதுக்கப்படும் எனவும், டோனி இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்யவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.


மேலும் முந்தைய ஆண்டு ஒப்பந்தத்தின் பிட டோனி A தர நிலையில் இருந்தபோது அவருக்கு 2 கோடி வழங்கப்பட்டதாகவும், ரோகித், புமரா மற்றும் புவனேஷ்குமார் ஆகிய மூவருக்கும் ரூ.1 கோடி வழங்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது. அதே வேலையில் ஷிகர் தவானுக்கும ரூ.50 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டது எனவும் தெரிவித்துள்ளது!