புதுடெல்லி: இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டி 20 கேப்டன் பதவியில் இருந்து விலகும் முடிவை சில நாட்களுக்கு முன்னதாக அறிவித்தார். இதன் பின்னணியில் கோஹ்லிக்கு எதிராக மூத்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், ரஹானே மற்றும் புஜாரா ஆகியோரின் அதிருப்தி தான் காரணம் என்றும்  தகவல்கள் கசிந்தன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டி 20 கேப்டன் பதவியில் இருந்து விலகும் முடிவை அறிவித்தற்கான காரணங்கள் எதுவாக இருந்தாலும், மூத்த வீரர்கள், கோஹ்லியின் அணுகுமுறை குறித்து புகார் கூறியது காரணம் என்ற செய்தி பல்வேறு ஊகங்களை ஏற்படுத்தின.


இது குறித்து கருத்து எதுவும் சொல்லாமல் இருந்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) தற்போது விராட் கோலியின் பதவி விலகல் விஷயத்தில் மெளனத்தை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது. 


Also Read | IPL Match 43: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோல்வி


புதன்கிழமையன்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் பேசிய பிசிசிஐ பொருளாளர் அருண் துமால், “ஊடகங்கள் இது போன்ற வதந்திகளை பரப்புவதை நிறுத்த வேண்டும். எந்த இந்திய கிரிக்கெட் வீரரும் விராட் கோலிக்கு எதிராக பிசிசிஐ -க்கு புகார் எதையும் எழுத்துப்பூர்வமாக கொடுக்கவில்லை. அதுமட்டுமல்ல,  வாய்மொழியாகவும் எந்தவிதமான புகாரையும் யாரும் சொல்லவில்லை. இதுபோன்று தொடர்ந்து வெளியிடப்படும் ஒவ்வொரு பொய்யான அறிக்கைகளுக்கும் பிசிசிஐ பதிலளிக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.


அதுமட்டுமல்ல, அவர் தனது பேட்டியில் இந்தியாவின் உலகக் கோப்பை அணியில் மாற்றங்கள் இருக்கும் என்று சொன்னதையும் நிராகரித்தார்.  


"இந்த வகையான அறிக்கைகள் இந்திய கிரிக்கெட்டை அதிகமாக பாதிக்கிறது. மூத்த ஊடகவியலாளர்கள் - விளையாட்டை மிக நீண்ட காலமாகப் பின்பற்றி, அதை கவனமாக செய்தியளிப்பவர்கள் இந்திய அணி இதைச் செய்ய வேண்டும் அல்லது செய்யாமல் இருக்கலாம் என்று சொல்லலாம். அந்த கருத்துக்களை நாங்கள் எடுத்துக் கொள்வோம். கருத்துக்களை புரிந்து கொள்ள முடியும், அதை மதிக்கிறோம். அவ்வாறு கருத்துகளையும், பரிந்துரைகளையும் சொல்வது அவர்களின் வேலை. ஆக்கப்பூர்வமான அறிக்கைகளைப் படித்து மகிழ்கிறேன். ஆனால் வதந்திகளை உருவாக்கி, இந்த நபர் இதைச் சொன்னார் அல்லது அந்த நபர் சொன்னார் என எந்த ஆதாரமும் இல்லாமல் சொல்வதை யாரும் நம்பவேண்டாம்” என்று பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் கூறுகிறார்.


Also Read | சென்னையிடம் தோற்றால் ப்ளே ஆஃப் சுற்று தகுதியை இழக்கும் SRH


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR


https://www.facebook.com/ZeeHindustanTamil
https://twitter.com/ZHindustanTamil