IPL 15: ஐ.பி.எல். குறித்து முக்கியத் தகவலை வெளியிட்ட பிசிசிஐ
அடுத்த சீசனில் இருந்து இரண்டு புதிய அணிகள் ஐ.பி.எல். தொடரில் கலந்துக்கொள்ளும். ஆகஸ்ட் மாதத்திற்குள், இரண்டு அணிக்கான டெண்டரை பி.சி.சி.ஐ. (Board of Control for Cricket in India) அறிவிக்கவுள்ளது.
புதுடெல்லி: உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் லீக் தொடரான ஐ.பி.எல். குறித்த செய்தி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளிக்கப்போகிறது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் இருந்து வெளியான செய்தி, என்னவென்றால், இனி 8 அணிகளுக்கு பதிலாக 10 அணிகள் ஐ.பி.எல். தொடரில் (Session IPL) பங்கேற்கும் என்பது தான்.
இரண்டு புதிய அணிகளுக்கான டெண்டர்:
அடுத்த சீசனில் இருந்து இரண்டு புதிய அணிகள் ஐ.பி.எல். தொடரில் கலந்துக்கொள்ளும். ஆகஸ்ட் மாதத்திற்குள், இரண்டு அணிக்கான டெண்டரை பி.சி.சி.ஐ. (Board of Control for Cricket in India) அறிவிக்கவுள்ளது. கடந்த காலத்தில் ஐ.பி.எல். தொடரில் 10 அணிகள் விளையாடி உள்ளான்ர். ஆனால் 2013 முதல் 8 அணிகளுக்கு இடையே மட்டும் போட்டி நடந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
14 வது சீசன் ஒத்தி வைக்கப்பட்டது:
இதுவரை 8 அணிகள் ஆடிவரும் நிலையில், பத்து அணிகள் பங்கேற்றால், இது பி.சி.சி.ஐ. க்கு அதிக வருவாய் ஈட்ட வழிவகுக்கும். தற்போதைய ஐபிஎல் சீசன் (IPL 2021) பற்றி பேசுகையில், கொரோனா தொற்று காரணமாக மே 4 அன்று ஆட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. மொத்தம் நடைபெறவிருந்த 60 போட்டிகளில் 29 போட்டிகள் முடிந்துள்ளன. மீதமுள்ள 31 போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் (IPL 2021 Rescheduled) நடைபெற உள்ளன. இதுவரை அங்கு நடைபெறவுள்ள போட்டிக்கான அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை.
ALSO READ | நடராஜனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த யோகி பாபு; புகைப்படங்கள் வைரல்
50 புதிய வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்:
அந்த அறிக்கையின்படி, ஆகஸ்டில், பிசிசிஐ இரண்டு புதிய அணிகளுக்கான டெண்டரை அறிவித்தால், அக்டோபர் மாதத்திற்குள் இரண்டு புதிய அணிகளைக் காணலாம். ஐ.பி.எல் அணிகளை வாங்குவதற்கான போட்டியில் கோயங்கா குழுமமும், அதானி குழுமமும் உள்ளன.
அதேபோல நகரத்திற்கான போட்டியில் அகமதாபாத் மற்றும் லக்னோ உரிமையாளர்கள் முன்னிலையில் இருப்பதாகத் தெரிகிறது. இரண்டு புதிய அணிகள் சேர்க்கப்பட்ட பிறகு, போட்டிகளின் எண்ணிக்கையும் 15 முதல் 30 என அதிகரிக்கும். அத்தகைய சூழ்நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரியில், ஊடக உரிமைகள் தொடர்பான டெண்டரை பி.சி.சி.ஐ அறிவிக்கலாம்.
2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் ஐபிஎல்லில் 10 உரிமையாளர்கள் பங்கேற்றனர், பின்னர் கொச்சி வாபஸ் பெற்றது. இது ஐபிஎல் உரிமையாளர்களின் எண்ணிக்கையை 9 ஆகக் குறைத்தது, பின்னர் புனே வாரியர்ஸ் இந்தியாவும் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது. தற்போது 8 அணிகள் காலத்தில் உள்ளன.
ALSO READ | IPL 2021 அட்டவணையில் முக்கிய மாற்றம், அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR