IPL Mini Auction : ஏலத்திற்கு வரும் டை பிரேக்கர் விதி... அடடே புதுசா இருக்கே!
IPL Mini Auction : ஐபிஎல் மினி ஏலத்தை முன்னிட்டு புதிய டை பிரேக்கர் என்ற விதிமுறையை பிசிசிஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
IPL Mini Auction : கோடை விடுமுறையை என்றாலே கொண்டாட்டம்தான். அந்த கொண்டாட்டத்திலும் பெரும் கொண்டாட்டமாக கடந்த 10 ஆண்டுகளாக ஐபிஎல் தொடர் இருந்து வந்தது. ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக 3 சீசன்கள் முழுமையாக இந்தியாவில் நடைபெறவில்லை.
வரும் 2023 ஐபிஎல் சீசன்தான் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற இருக்கிறது. ஹோம் அண்ட் அவே பாணி மீண்டும் ஐபிஎல் தொடரில் கம்பேக் கொடுக்க இருக்கிறது. அந்த வகையில், வரும் 15ஆவது ஐபிஎல் தொடரின் மினி ஏலம் கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள போல்காட்டி தீவில் உள்ள கிராண்ட் ஹயாட் சொகுசு விடுதியில் இன்று மதியம் 2.30 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்த ஏலத்தில் மொத்தம் 405 வீரர்கள் பட்டியலிடப்பட்டார்கள். இருந்தாலும், 10 அணிகளுக்கும் தேவையான மொத்த வீரர்களின் எண்ணிக்கை 87 தான். எனவே, ஏலத்தில் இந்த 405 வீரர்களில் 87 பேரை தான் அனைத்து அணிகளும் தேர்வு செய்யப்போகின்றன.
மேலும் படிக்க | ஐபிஎல் மினி ஏலம் 2023: அணிகள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய 5 விதிகள்
இந்த ஏலம், மினி ஏலம் என்பதால் இன்று ஒருநாள் மட்டுமே நடைபெற உள்ளது. இந்த ஏலத்தின் விதிகள் ஒன்றை பிசிசிஐ அறிமுகப்படுத்தியுள்ளது. அதவாது, ஒரே தொகையில் ஒரு வீரரை இரண்டு அணிகள் தேர்வுசெய்தால், எந்த அணிக்கு அந்த வீரர் என்பதை முடிவு செய்ய 'Tie-Breaker' என்றி விதிதான் அது.
அதாவது, இரு அணிகள் ஒரே தொகையில் ஒரு வீரரை ஏலம் கேட்கும்பட்சத்தில், அந்த அணிகளுக்கு ஒரு படிவம் வழங்கப்படும். அந்த படிவத்தில் மறைமுகமாக ஏலத்தை தொகையை அந்த அணிகள் குறிப்பிட வேண்டும். அந்தந்த ஏலங்களை அந்த அணிகள் மட்டுமே அறிந்து கொள்ள முடியும். இந்த முறையில் அதிக ஏலம் எடுப்பவர் வெற்றி பெற்று அந்த வீரரை கைப்பற்றுவார்கள். குறிப்பிட்ட ஏலத்தின் பணம் பிசிசிஐயால் பெறப்படும், அது சம்பள வரம்பில் இருந்து கழிக்கப்படாது.
"Tie-Breaker ஏலம், அணிகள் பிசிசிஐக்கு செலுத்தத் தயாராக இருக்கும் ஒரு தவணையில் செலுத்த வேண்டிய தொகையைதான் குறிக்கும். இந்த ஏலத்தின் அளவு, கடைசி ஏலத்தின் தொகையில் இருந்து தனியாகவும் கூடுதலாகவும் இருக்கும். டைபிரேக் ஏலம் என்பது பிசிசிஐக்கு அணிகள் செலுத்தத் தயாராக இருக்கும் தனித் தொகையாகும். டைபிரேக் ஏலத்தொகைக்கு எந்த வரம்பும் இல்லை” என்று பிசிசிஐ உரிமையாளர் அணிகளுக்கு தெரிவித்துள்ளது. இதற்கு முன்பு, ஒரே தொகையில், இரு அணிகள் ஒரு வீரரை ஏலம் கேட்டால், கடைசியாக ஏலம் கேட்டவருக்கு வீரர் ஒப்பந்தம் செய்யப்படுவார். தற்போது, இந்த விதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ