இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் உள்பட துணை ஊழியர்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக BCCI அறிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தலைமை பயிற்சியாளர் உட்பட இந்திய கிரிக்கெட் அணியின் துணை ஊழியர்களுக்கான புதிய விண்ணப்பங்களை BCCI வரவேற்தாக அறிவித்துள்ளது. மேலும் தற்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அவர்களின் ஒப்பந்தம் அடுத்த மாதம் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தின் பின்னர் காலாவதியாகும் நிலையில், அவர் மீண்டும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.


இந்த அறிவிப்பின் மூலம்., இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) இந்திய ஆண்கள் அணிக்கான தலைமை பயிற்சியாளர், பேட்டிங் பயிற்சியாளர், பந்துவீச்சு பயிற்சியாளர், பீல்டிங் பயிற்சியாளர், பிசியோதெரபிஸ்ட், வலிமை மற்றும் கண்டிஷனிங் பயிற்சியாளர் மற்றும் நிர்வாக மேலாளர் பதவிகளை நிரப்ப உள்ளதாக தெரிகிறது.


உலக கோப்பை தொடரை தொடர்ந்து எதிர்வரும் ஆகஸ்ட் 3 முதல் செப்டம்பர் 3 வரை மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் பங்கேற்கும் இந்திய அணியின் பயிற்சியாளர் சாஸ்திரி, பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண், பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் மற்றும் பீல்டிங் பயிற்சியாளர் ஆர்.ஸ்ரீதர் ஆகியோர் அடங்கிய ஆதரவு ஊழியர்களுக்கு 45 நாள் ஒப்பந்தம் நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது.


தற்போது பதவியில் இருக்கும் இவர்கள் அனைவரும் மீண்டும் விண்ணப்பிக்க இயலும், ஆனால் உலகக் கோப்பையில் இந்தியா அரையிறுதி விலகியதைத் தொடர்ந்து ஷங்கர் பாசு மற்றும் பேட்ரிக் ஃபர்ஹார்ட் வெளியேறிய நிலையில், அணி ஒரு புதிய பயிற்சியாளரையும் பிசியோவையும் பெற உள்ளது.


மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்திற்குப் பின்னர் நாடு திரும்பும் இந்தியா வரும் செப்டம்பர் 15 முதல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை தொடங்குகிறது. தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தொடருக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் துணை ஊழியர்கள் நிரப்பபடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.



சர்ச்சைக்குரிய சூழ்நிலையில், அனில் கும்ப்ளேவின் பதவிக்காலம் முன்கூட்டியே முடிவடைந்ததை அடுத்து 2017-ஆம் ஆண்டில் சாஸ்திரி இந்தியாவின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். 57 வயதான இவர் ஆகஸ்ட் 2014 முதல் ஜூன் 2016 வரை இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குநராகவும் இருந்தார்.


சாஸ்திரியின் வழிகாட்டுதலின் கீழ் இந்தியா ஒரு பெரியது ஒரு ICC போட்டி ஏதும் வெல்லவில்லை, ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரை வென்றதன் மூலம் இந்திய அணி புதியதொரு வரலாறு படைத்தது குறிப்பிடத்தக்கது.