இந்திய கிரிக்கெட் அணி வெளிநாட்டு தொடர்களின் போது தங்கள் மனைவி, குழந்தைகளை அழைத்து செல்வது வழக்கம். ஆனால் இதற்க்கு பிசிசிஐ சில கட்டுப்பாடு மற்றும் விதிகளை விதித்துள்ளது. அதாவது வெளிநாட்டு தொடர்களில் விளையாடும் போது 2 வாரங்களுக்கு மேல் வீரர்களின் மனைவிகள் அவர்களுடன் தங்கக்கூடாது. அவர்கள் நாடு திரும்ப வேண்டும் எனக் கட்டுப்பாடு விதித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த கட்டுப்பாடு குடும்பங்களுடன் வீரர்கள் இருப்பது, ஆட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதற்காக நடைமுறை படுத்தி உள்ளது பி.சி.சி.ஐ.


இந்நிலையில், வெளிநாட்டு தொடர்களின்போது தங்கள் மனைவி மற்றும் குடும்பத்தாரை தொடர் முழுவதும் எங்களுடன் தங்க அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார் இந்திய கேப்டன் விராட் கோலி. இதுக்குறித்து பிசிசிஐ ஆலோசனை செய்து வந்தது. 


தற்போது இந்திய வீரர்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் தங்கள் மனைவி, குழந்தைகளை அழைத்து செல்லலாம் என்ற விராட்டின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டது.