அஜிங்க்யா ரஹானே மற்றும் சேட்டேஷ்வர் புஜாரா இருவரும் கடந்த 1-2 ஆண்டுகளாக இந்திய அணியில் மோசமான ரங்களையே எடுத்துள்ளனர்.  இதன் காரணமாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, இருவரும் ரஞ்சி டிராபிக்கு திரும்ப வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். இந்திய டெஸ்ட் அணியில் சமீபத்திய இருவரின் ஆட்டம் பல விமர்சனங்களை பெற்றது.  இந்திய டெஸ்ட் அணியில் அவர்களின் வாய்ப்பு ஏற்கனவே முடிந்துவிட்டதாக சிலர் கருதும் நிலையில், கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) தலைவர் சவுரவ் கங்குலி இருவரையும் மீண்டும் ரஞ்சி டிராபிக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ALSO READ | புஜாராவை எச்சரித்த இந்திய அணியின் முன்னாள் தேர்வாளர்!


கங்குலி (Ganguly) சமீபத்தில் அளித்த பேட்டியில், புஜாரா மற்றும் ரஹானே இருவரும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் மீண்டும் விளையாட வேண்டும்.  2005-ல் நானும் ரஞ்சி கோப்பைக்கு விளையாட சென்றேன்.  உள்நாட்டு போட்டிகளில் ஏராளமான ரன்களை எடுத்த பிறகு, எனக்கு இந்திய அணியில் வலுவான மறுபிரவேசம் கிடைத்தது. புஜாரா மற்றும் ரஹானே ஆகியோருக்கு தற்போது இந்த தேவை வந்துள்ளது.  அவர்கள் மிகவும் நல்ல வீரர்கள், அவர்கள் மீண்டும் ரஞ்சி டிராபிக்கு சென்று நிறைய ரன்களை அடிப்பார்கள் என்று நம்புகிறேன். 



ரஞ்சி டிராபி ஒரு பெரிய போட்டியாகும், நாங்கள் அனைவரும் அந்த போட்டியை விளையாடியுள்ளோம்.  எனவே, அவர்களும் அங்கு திரும்பிச் சென்று விளையாடுவார்கள். அவர்கள் கடந்த காலத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடியுள்ளனர், மேலும் ODI அல்லது டி20 அணியில் பங்கேற்கவில்லை. அதனால், ரஞ்சி அவர்களுக்கு பெரும் சிரமமாக இருக்காது.  



நாங்கள் ரஞ்சி டிராபியை நடத்த ஒரு வருடத்தை தவறவிட்டோம். இது இந்தியாவின் மிக முக்கியமான போட்டியாகும், நாங்கள் எப்போதும் அதை ஏற்பாடு செய்ய விரும்புகிறோம். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் கொரோனா தொற்று காரணத்தால் நடத்த முடியவில்லை. நாங்கள் கூச் பெஹர் டிராபியை (Cooch Behar Trophy )ஏற்பாடு செய்தோம், ஆனால் மூன்றாவது அலை வந்தது. முதல் நாளிலேயே, 50 வீரர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டனர். இது எளிதானது அல்ல, ஆனால் நாங்கள் போட்டிகளை நடத்துவது எங்களது அதிர்ஷ்டம் என்று கூறினார். ரஞ்சி டிராபி 2022 சீசன் பிப்ரவரி 16 அன்று தொடங்க உள்ளது மற்றும் அதன் முதல் கட்டம் மார்ச் 05 வரை நீடிக்கும். போட்டியின் இரண்டாம் கட்டம் ஜூன் மாதம் நடைபெறும்.


ALSO READ | Adelaide to Johannesburg: கேப்டன் விராட் கோலியின் சிறந்த 5 டெஸ்ட் வெற்றிகள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR