பிசிசிஐ-க்கு கடும் கண்டனம் தெரிவித்த ரவி சாஸ்திரி! இதான் காரணம்!

ஐபிஎல் போட்டிகளுக்கு ரஞ்சிக் கோப்பையை விட முன்னுரிமை அளித்ததற்காக பிசிசிஐ மீது தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார் ரவிசாஸ்திரி.    

Written by - RK Spark | Last Updated : Jan 29, 2022, 08:59 AM IST
  • இந்தியாவில் ரஞ்சி கோப்பைகள் கடந்த சீசனில் கொரோனா சூழ்நிலை காரணமாக நடத்தப்படவில்லை.
  • கடந்த நவம்பர் மாதம் நடைபெற வேண்டிய இந்த போட்டிகள் சரியான தேதி கிடைக்காமல் தள்ளி போய் கொண்டுள்ளது.
பிசிசிஐ-க்கு கடும் கண்டனம் தெரிவித்த ரவி சாஸ்திரி! இதான் காரணம்!  title=

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி ரஞ்சி கோப்பை நடத்துவதற்காக பிசிசிஐ எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.  ரஞ்சி கோப்பை இந்திய கிரிக்கெட் வீரர்களை உருவாக்கும் முதுகெலும்பு என்றும் கூறியுள்ளார். 

ALSO READ | திடீரென்று ஸ்பின்னர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் டீம் இந்தியா! காரணம் என்ன?

இந்தியாவில் ரஞ்சி கோப்பைகள் கடந்த சீசனில் கொரோனா சூழ்நிலை காரணமாக நடத்தப்படவில்லை.  கடந்த நவம்பர் மாதம் நடைபெற வேண்டிய இந்த போட்டிகள் சரியான தேதி கிடைக்காமல் தள்ளி போய் கொண்டுள்ளது.  தற்போது பிசிசிஐ (BCCI) ஐபிஎல் ஏலம் மற்றும் போட்டிகளை நடத்துவதற்கு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.  பிசிசிஐ- யின் முக்கிய தலைமையிலான சவுரவ் கங்குலி மற்றும் ஜெய்ஷா இரண்டு நாட்களுக்கு முன் ரஞ்சி கோப்பையை நடத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.  அதில் இரண்டு கட்டங்களாக ரஞ்சிக் கோப்பையை நடத்தலாம் என்று முடிவு செய்தனர். 

ravi

முதல்கட்ட போட்டிகள் பிப்ரவரி இரண்டாம் வாரம் தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.  ஐபிஎல் போட்டிகளை (IPL Match) சுமூகமாக நடத்துவதற்காகவே ரஞ்சி கோப்பையை இரண்டு கட்டங்களாக நடத்துகிறார்கள் என்று கூறப்படுகிறது.  இன்னிலையில், "ரஞ்சி கோப்பை இந்திய கிரிக்கெட்டின் முதுகெலும்பு, நீங்கள் அதை புறக்கணிக்க தொடங்கும் தருணத்தில் இந்திய அணி முதுகெலும்பில்லாமல் ஆகும்" என்று ட்விட்டரில் ரவிசாஸ்திரி கூறியுள்ளார். இது தற்போது இந்திய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

 

இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் இர்பான் பதான் தனது ட்விட்டர் பக்கத்தில், கடந்த இரண்டு மூன்று நாட்களாக உள்ளூர் விளையாட்டு வீரர்கள் என்னிடம் கேட்கிறார்கள், ரஞ்சி கோப்பை நடைபெறுமா நடைபெறாத என்று.  இது போன்ற வீரர்கள் ஐபிஎல்-ல் விளையாடுவதில்லை, மாறாக முக்கிய போட்டிகளான  ரஞ்சி கோப்பை, விஜய் ஹசாரே, சையது முஷ்டாக் அலி டிராபி போன்றவற்றில் தான் விளையாடுகின்றனர்.  உள்ளூர் போட்டிகள் நடத்தபடவில்லை  என்றால் அம்பயர்களும்,  மைதானத்தில் வேலை பார்ப்பவர்களும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

ALSO READ | India Squad: குல்தீப் Come Back..! ஓரம்கட்டப்படும் சீனியர் வீரர்?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News