கடந்த தசாப்தத்தில், சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற பெருமையை பெற்ற இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வீனுக்கு  BCCI தலைவர் கங்குலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும் 564 விக்கெட்டுகளை வீழ்த்தி கடந்த தசாப்தத்தின் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற பெருமையினை பெற்றுள்ளார். இந்நிலையில் BCCI தலைவர் சவுரவ் கங்குலி செவ்வாய்க்கிழமை, அஸ்வினை வாழ்த்தியுள்ளார்.



எவ்வாறாயினும், ஆஃப்-ஸ்பின்னருக்கு தனது சாதனைகளுக்கு உரிய பாராட்டுக்கள் கிடைக்கவில்லை என்று கங்குலி குறிப்பிட்டுள்ளார். முன்னதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) தனது சமூக ஊடக கணக்குகளில் செவ்வாயன்று அஸ்வின் படத்தை தசாப்தத்தின் அதிக விக்கெட் வீழ்த்தியவர் பட்டியலில் வெளியிட்டது, அதே நேரத்தில் இந்த தசாப்தத்தில் அதிக விக்கெட் வீழ்த்திய 5 வீர்களையும் குறிப்பிட்டிருந்தது.


இந்த உயரடுக்கு பட்டியலில் 33 வயதான அஸ்வின் மட்டுமே சுழற்பந்து வீச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது, இதில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்களான ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் முறையே 2 மற்றும் 3-வது இடங்களைப் பிடித்தனர். இந்த தசாப்தத்தில் ஆண்டர்சன் 535 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், பிராட் தனது பெயரில் 525 விக்கெட்டுகளையும், நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்களான டிம் சவுதி மற்றும் ட்ரெண்ட் போல்ட் முறையே 472 மற்றும் 458 விக்கெட்டுகளுடன் 4 மற்றும் 5-வது இடங்களைப் பிடித்துள்ளனர்.


இந்நிலையில் இதுகுறித்து கங்குலி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுகையில்., "இந்த தசாப்தத்தில் அஸ்வினுக்கு பெரும்பாலான சர்வதேச விக்கெட்டுகள் கிடைத்துள்ளது. என்ன ஒரு முயற்சி.. சில நேரங்களில் கவனிக்கப்படாமல் போகும்போது கிடைக்கும் ஒரு உணர்வு.. சூப்பர் விஷயங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.



சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சாதனை படைத்துள்ள அஸ்வின், டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற பெருமையினையும் தன் கையில் வைத்துள்ளார். 65 டெஸ்ட் போட்டிகளில் சராசரியாக 25.44 என்ற விகிதாச்சாரத்தில் 342 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிக விரைவில் 50, 100, 150, 200, 250, 300 மற்றும் 350 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியர் என்ற பெருமையினையும் அஸ்வின் வைத்திருக்கிறார்.


இந்தியாவின் டெஸ்ட் அணியில் அஸ்வின் முக்கியமான வீரர்களில் ஒருவர், ஆனால் அவர் 2017 மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்திலிருந்து வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கிரிக்கெட்டில் இந்தியாவை பிரதிநிதித்துவப் படுத்தவில்லை. அஸ்வின் கடைசியாக மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக ஜூன் 30, 2017 அன்று இந்தியாவுக்காக ஒருநாள் விளையாட்டை விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.