டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அடுத்த இரண்டு கோப்பைகளை வெல்வதற்கு ஆயத்தமாகுமாறு ஜெய் ஷா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து ஜெய் ஷா வெளியிட்டிருக்கும் வீடியோவில், டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இந்த டி20 உலகக்கோப்பையை ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோருக்கு அர்பணிப்பதாக தெரிவித்திருக்கும் அவர், உடனடியாக அடுத்த இரண்டு கோப்பைகளை வெல்ல ரோகித் சர்மா தயாராக வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | 'உங்கப்பன் விசில கேட்டவன்' ரஜினி பாட்டை போட்டு கேக் வெட்டிய தோனி - சாக்‌ஷி செய்த திடீர் காரியம்!


மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி கோப்பை தொடருக்கு ரோகித் சர்மாவே கேப்டனாக நீடிப்பார் என்றும் ஜெய் ஷா அறிவித்துள்ளார். அவரது தலைமையின் கீழ் இந்திய அணி இந்த இரண்டு தொடர்களிலும் சிறப்பாக விளையாடும் என்று நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார். அந்த வீடியோவில் ஜெய் ஷா மேலும் பேசும்போது, " டி20 உலகக்கோப்பையில் சிறப்பாக ஆடிய அனைத்து இந்திய வீர ர்களுக்கும் என்னுடைய நன்றி. சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங் ஆகியோரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க வகையில் இருந்தது.


இதேபோன்று இந்திய அணி எதிர்வரும் சாம்பியன்ஸ் டிராபி மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்களிலும் விளையாடும் என்று உறுதியாக நம்புகிறேன். கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த இரண்டு கோப்பைகளையும் வெல்லும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. 



பயிற்சியாளர் ராகுல் டிராவிட், ஜடேஜா, கோலி, ரோகித் ஆகியோருக்கு என்னுடைய நன்றி, இந்திய அணி வென்ற டி20 உலகக்கோப்பையை உங்களுக்கு அர்பணிக்கிறேன்" என தெரிவித்துள்ளார். ஜெய்ஷாவின் இந்த அறிவிப்பு மூலம் ரோகித் சர்மா அடுத்த ஆண்டு வரை இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் நீடிப்பார் என்று உறுதியாகியுள்ளது.


20 ஓவர் தொடரைப் பொறுத்தவரை ரோகித் சர்மா ஓய்வு பெற்றுவிட்டதால், முழுநேர கேப்டன் என பிசிசிஐ யாரையும் இதுவரை அறிவிக்கவில்லை. ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் ரோகித் சர்மாவே நீடிக்க உள்ளார். அதனால் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணியை கேப்டன் ரோகித் சர்மா வழிநடத்துவது உறுதியாகியுள்ளது.  


மேலும் படிக்க | இதுவே லாஸ்ட் சான்ஸ்... இந்த வீரர் சொதப்பினால் இனி வெளியே தான் - தப்பிக்குமா இந்தியா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ