இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடரை துபாயில் நடத்த அனுமதி கேட்டு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு பிசிசிஐ கடிதம் எழுதியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அரசு அனுமதி வழங்கும்பட்சத்தில் துபாயில், இரு அணிகள் மோதும் கிரிக்கெட் தொடர் நடக்கும். 


இந்தியா மீது பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் நடக்கவில்லை. பிசிசிஐ தலைவராக இருந்த சஷாஙக் மனோகர் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான குறுகிய கால கிரிக்கெட் தொடர் நடத்த முயற்சி செய்யப்பட்டது. ஆனால், மத்திய அரசு இதற்கு அனுமதி தரவில்லை. 


இந்நிலையில் தற்போது துபாயில் கிரிக்கெட் தொடர் நடத்த அனுமதி கேட்டு உள்துறை அமைச்சகத்திற்கு பிசிசிஐ சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. 


இது குறித்து பிசிசிஐ நிர்வாகி கூறியதாவது: உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி கேட்டு கடிதம் எழுதியுள்ளோம். அரசின் நிலை என்ன என்பது பற்றி தெரியவில்லை. கடந்த முறை இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் நிலவியது. எதிர்கால கிரிக்கெட் தொடர் அட்டவணையை நிறைவேற்ற வேண்டும். இதனால் தான் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் தொடர் நடத்த விரும்புகிறோம். அரசின் அனுமதி இல்லாமல் பிசிசிஐ எதுவும் செய்யாது. 


இவ்வாறு அவர் கூறினார்.