T20 World Cup: இந்திய அணியில் மீண்டும் மாற்றம்? பிசிசிஐ விரைவில் முக்கிய முடிவு
20 ஓவர் உலகக்கோப்பை விரைவில் தொடங்க இருக்கும் நிலையில், இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணி வலுவான அணியாக இருக்கும்போதிலும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் தோல்வியை தழுவி வெளியேறியது. பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளிடம் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்தது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது. பேட்டிங்கில் வலுவாக இருக்கும் இந்திய அணி, பந்துவீச்சில் சரியான காம்போ இல்லாமல் தடுமாற்றத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக டெத் ஓவர்களை துல்லியமாக வீசும் அளவுக்கான பந்துவீச்சாளர்கள் இல்லை. மூத்த பவுலரான புவனேஷ்வர் குமார் தொடர்ந்து 3வது முறையாக சொதப்பி இந்திய அணியின் தோல்விக்கு மிக முக்கியமான வீரராக மாறியிருக்கிறார்.
அவரால் டெத் ஓவர்களில் துல்லியமாக வீச முடியவில்லை. 19 மற்றும் 20வது ஓவர்களில் ரன்களை வாரிக் கொடுக்கிறார். இவர் ஒருபுறம் என்றால் மற்றொரு என்டில் வீசக்கூடிய அளவுக்கான பந்துவீச்சாளர்களும் குறிப்பிட்டு சொல்லும்படி இல்லை. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் களமிறக்கப்பட்ட உமேஷ் யாதவ், எதிர்பார்த்த அளவுக்கு சோபிக்கவில்லை. அவருடைய பந்துவீச்சை ஆஸ்திரேலிய வீரர்கள் அழகாக எதிர்கொண்டு பவுண்டரி, சிக்சர்களாக விளாசினர்.
208 ரன்கள் அடித்தபோதும் அதனை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கான பந்துவீச்சாளர் மட்டுமே அணியில் இருப்பது பிசிசிஐ தேர்வாளர்களை கவலையடைய வைத்துள்ளது. இதனால் வேகப்பந்து வீச்சு கூட்டணியை மாற்றியமைக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஆஸ்திரேலிய தொடர் முடிந்தவுடன் வீரர்களின் செயல்திறன் அடிப்படையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 20 ஓவர் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ஒரு சில மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோருடன் கலந்தாலோசித்து இந்த முடிவை எடுக்க இருக்கிறது பிசிசிஐ.
மேலும் படிக்க | கோலிதான் தொடக்கம் தர வேண்டும் - முன்னாள் விக்கெட் கீப்பர் யோசனை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ