ரோகித் கேப்டனுக்கு சரியில்லை... மீண்டும் அவரை கொண்டு வாங்க; ரசிகர்கள் சொல்ல காரணம் இருக்கு

இந்திய அணியின் கேப்டன் பொறுப்பு ரோகித் சர்மா சரியில்லை என ரசிகர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 21, 2022, 01:08 PM IST
  • ரோகித் சர்மா மீது ரசிகர்கள் கடும் கோபம்
  • இந்திய அணியின் கேப்டன்சியிக்கு சரியில்லை
  • மீண்டும் அந்த வீரரை கேப்டனாக்க வலியுறுத்தல்
ரோகித் கேப்டனுக்கு சரியில்லை... மீண்டும் அவரை கொண்டு வாங்க; ரசிகர்கள் சொல்ல காரணம் இருக்கு title=

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் 20 ஓவர் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 208 ரன்கள் என்ற மெகா டார்கெட் நிர்ணயித்தபோதும், வெற்றி பெற முடியவில்லை. பந்துவீச்சில் தொடர்ந்து சொதப்பி வருகின்றனர். பலம் வாய்ந்த அணியாக பார்க்கப்படும் இந்திய அணி, ஆசியக்கோப்பையிலும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக நல்ல ஸ்கோரை எடுத்து அதனை பந்துவீச்சில் கட்டுப்படுத்த முடியவில்லை.

தொடர்ந்து மூன்றாவது முறையாக பெரிய ஸ்கோரை டார்கெட்டாக நிர்ணயித்து, பந்துவீச்சில் இந்திய அணி சோடைபோயிருக்கிறது. இது ரோகித் சர்மாவின் கேப்டன்சி தவறால் கிடைத்த முடிவுகள் என ரசிகர்கள் தொடர்ச்சியாக விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடரில் பங்கேற்றும் விளையாடும் அணிகளுக்கு காட்டும் அர்பணிப்பு, இந்திய அணிக்காக விளையாடும்போது இருப்பதில்லை எனத் தெரிவித்துள்ள ரசிகர்கள், ரோகித் சர்மாவின் பிளேயிங் லெவனையும் சாடியுள்ளனர். தவறான பிளயேர்களை அணிக்குள் கொண்டு வரும் தவறை ரோகித் தொடர்ச்சியாக செய்கிறார். அதேபோல், சரியான நேரத்தில் சரியான நபர்களுக்கு பந்துவீச்சை கொடுப்பதிலும் தவறு செய்கிறார். 

புவனேஷ்வர் குமாரால் டெத் ஓவர்கள் வீச முடியவில்லை என்பதை இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டியிலேயே கண்கூடாக தெரிந்துவிட்டது. அப்படி இருக்கும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியிலும் அவருக்கு ஏன் டெத் ஓவரில் அதிகம் வாய்ப்பு கொடுக்கப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது. அடுத்து 20 ஓவர் உலகக்கோப்பை வர இருக்கும் நிலையில், இதே தவறுகளை மீண்டும் செய்தால் அந்த கனவை கலைத்துவிட வேண்டியது தான் எனவும் கூறியிருக்கும் ரசிகர்கள், இந்திய அணிக்கு ரோகித்துக்கு பதிலாக விராட் கோலியையே மீண்டும் கேப்டனாக நியமிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.  

மேலும் படிக்க | உலக கோப்பை 2022-ல் இந்திய அணி விளையாடும் போட்டிகளின் முழு விவரம்!

மேலும் படிக்க | T20 World Cup: எதிரணியை கலங்கடிக்க ரோகித் சர்மாவின் ஸ்பெஷல் பிளான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News