இந்தியாவில் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி கோலாகலமாக நடைபெற இருக்கிறது. முதல் போட்டியானது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருக்கும் நரேந்திரமோடி மைதானத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய அணி முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலக கோப்பை பரிசுத் தொகை


இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் போட்டி உலகக் கோப்பையில் வெற்றி பெறும் அணிக்கு கோப்பையுடன் 4 மில்லியன் டாலர், அதாவது இந்திய ரூபாயில் ரூ 33.24 கோடிபரிசுத் தொகை கிடைக்கும். அதே நேரத்தில் ரன்னர்-அப் அணி 16 கோடியே 50 லட்சம் ரூபாய் பெறும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது. அரையிறுதியில் தோல்வியடையும் அணிகளுக்கு தலா 6.65 கோடி ரூபாய் கிடைக்கும். லீக் சுற்றோடு வெளியேறும் அணிகள் மற்றும் வெற்றி பெறும்  ஒவ்வொரு போட்டிக்கும் இம்முறை பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுளது. 


ரவுண்ட் ராபின் முறையில் போட்டி


இம்முறை உலக கோப்பை போட்டியானது ரவுண்ட் ராபின் முறையில் நடைபெறும். அனைத்து அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒரு போட்டியில் மோதும். வெற்றி பெற்று முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும். இம்முறை ஆண்கள் மற்றும் பெண்கள் இரண்டு உலக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்குமே ஒரு மாதிரியான பரிசுத் தொகைகள் வழங்கப்பட இருக்கின்றன. 


மேலும் படிக்க | சிவனின் திரிசூலம், பிறை நிலா வடிவில் உருவாகும் வாரணாசி கிரிக்கெட் மைதானம்


இந்திய வீரர்களுக்கு என்ன கிடைக்கும்?


உலக கிரிக்கெட் வாரியங்களில் மிகவும் பணக்கார கிரிக்கெட் வாரியம் பிசிசிஐ. ஒருவேளை சொந்த மண்ணில் இந்திய அணி உலக கோப்பையை வெற்றி பெற்றால் பரிசுத் தொகையைவிட இருமடங்கு தொகையை வீரர்களுக்கு பிசிசிஐ அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கூடுதலாக உலக கோப்பை அணியில் இடம்பெற்ற அனைத்து வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு பல்வேறு சலுகைகளும் கிடைக்கும். கடைசியாக 2011 ஆம் ஆண்டு எம்எஸ் தோனி தலைமையில் இந்திய அணி உலக கோப்பையை இந்திய மண்ணில் வென்றது. அதன்பிறகு நடைபெற்ற உலக கோப்பைகளில் இந்திய அணியால் வெற்றி பெற முடியவில்லை.  


மேலும் படிக்க | Mohammed Shami: நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று சர்வதேச கிரிக்கெட் விளையாடும் முகமது ஷமி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ