புது டெல்லி: இந்தியா தற்போது கொரோனா (Covid-19) தொற்றுநோயின் இரண்டாவது அலைகளை எதிர்கொள்கிறது. இதற்கு உதவ பி.சி.சி.ஐ யும் முன்வந்துள்ளது. அதன்படி இந்தியாவுக்கு 2,000 ஆக்சிஜன் கான்செண்ட்ரேட்டர்களை வழங்குவதாக பிசிசிஐ அறிவித்து உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அடுத்த சில மாதங்களில், இந்த கான்செண்ட்ரேட்டர்கள் (Oxygen Concentratorsநாடு முழுவதும் உள்ள ஏழை மக்களுக்கு வழங்கப்படும். முன்னதாக, விராட் கோலி, ரிஷாப் பந்த், ஹனுமா விஹாரி, ஹார்டிக் பாண்ட்யா, கிருனல் பாண்ட்யா, ஷிகர் தவான் உள்ளிட்ட பல இந்திய வீரர்கள் கொரோனா போரில் உதவியுள்ளனர். இதற்கிடையில் இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. 


ALSO READ | கசிந்தது BCCI பிளான், IPL ரசிகர்களுக்கு இனிப்பு செய்தி​


இந்நிலையில் தற்போது ஆக்சிஜன் கான்செண்ட்ரேட்டர்களை வழங்குவது குறித்த தகவலை பிசிசிஐ டிவிட்டர் மூலம் வழங்கி உள்ளது. அதில், COVID-19 தொற்றுநோயை சமாளிப்பதில் இந்தியாவின் முயற்சிகளை அதிகரிக்க பி.சி.சி.ஐ (BCCI) 10-லிட்டர் 2000 ஆக்ஸிஜன் செறிவுகளை வழங்க உள்ளது. என்று பதிவிட்டுள்ளது. 


 



 


இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் தொடங்கிய கொரோனா 2ம் அலையால் பல லட்சம் உயிர்கள் பறிபோயுள்ளன. நோயாளிகளின் அதிக எண்ணிக்கையால் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை, படுக்கை வசதி, மருந்து தட்டுப்பாடு போன்ற நெருக்கடிகள் ஏற்பட்டது. பல்லாயிரக்கன்னைக்கான மக்கள் ஆக்சிஜன் சிலிண்டர்கள் இல்லாமல் உயிரிழந்த பரிதாபம் மனதை பதைபதைக்க வைத்தது. 


இந்த ஆக்சிஜன் பற்றாக்குறை நீக்க பல பிரபலங்கள், வீரர்கள் என இந்தியாவுக்கு உதவ முன்வந்தனர். அந்த வகையில் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் பேட் கம்மின்ஸ், பிரெட் லீ போன்ற வீரர்கள் உதவினர். அதைத்தொடர்ந்து தற்போது இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) கொரோனா பேரிடரை எதிர்கொள்ள இந்தியாவுக்கு உதவுகிறது.


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR