இந்திய கிரிக்கெட் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு தயாராகி வருகிறது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் (BCCI) சுற்றுப்பயணத்திற்கான அணியை அறிவித்துள்ளது. இந்த போட்டிகள் ஜூன் முதல் செப்டம்பர் வரை நடைபெற உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் இந்தத் தொடரில் பங்கேற்க உள்ள வீரர்கள் மும்பையிலிருந்து இங்கிலாந்து செல்வார்கள். அதற்கு முன்பு வீரர்களுக்கு கொரோனா (Corona Test) பரிசோதனை மேற்கொள்ளப்படும். அந்த பரிசோதனையில் வீரர்கள் யாருக்கேனும் நோய் தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானால் இங்கிலாந்து தொடரை சம்பந்தப்பட்ட வீரர் மறந்து விட வேண்டியதுதான் என இந்திய கிரிக்கெட் வாரியம் (BCCI) வீரர்களை எச்சரித்துள்ளது. 


ALSO READ | World Test Championship இந்திய அணி அறிவிப்பு, ஜடேஜா உள்ளே, பாண்ட்யாவும் குல்தீப்பும் வெளியே


பாதுக்காக்கப்பட்ட பயோ பபிளில் வீரர்கள் இருப்பதை உறுதி செய்யவே இந்த நடைமுறையை பின்பற்ற வேண்டி உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. எனவே வீரர்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருக்குமாறு பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது. மேலும் வீரர்களின் குடும்பத்தினரையும் இங்கிலாந்து தொடருக்கு அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. வீரர்களை போலவே அவர்களது குடும்பத்தினரும் பயோ பபுளில் மட்டுமே இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக ஐபிஎல் தொடரின் 14வது சீசன் கடந்த ஏப்ரல் 9ம் தேதி முதல் நடைபெற்று வந்தது. தொற்று குறித்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் போட்டிகள் நடத்தப்பட்டாலும், தொடரில் கலந்து கொண்டுள்ள கொல்கத்தா அணி வீரர்களுக்கும், சென்னை அணியின் நிர்வாகிகளும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் நடப்பு ஐபிஎல் தொடர் ரத்து செய்யப்படுவதாக பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். 


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR