IPL 2024 News In Tamil: ஐபிஎல் தொடர் வரும் கோடை காலத்தில் இந்தியாவின் பல நகரங்களில் நடைபெற உள்ளது. மக்களவை தேர்தலும் உள்ள நிலையில், தொடரின் அட்டவணை குறித்த அறிவிப்பு விரைவில் வரலாம் என கூறப்படுகிறது. முன்னதாக, ஐபிஎல் ஏலம் கடந்த டிச.19ஆம் தேதி நடைபெற்ற நிலையில், அதையொட்டி பரபரப்பான செய்திகள் ஐபிஎல் வட்டாரத்தில் உலா வந்தன. இதுரை எந்த ஐபிஎல் சீசனுக்கும் இல்லாத எதிர்பார்ப்பு தற்போது வரும் 2024 சீசனுக்கு (IPL 2024) எழுந்திருப்பது கவனிக்க வேண்டியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரோஹித் சர்மா ஓரங்கட்டப்பட்டாரா?


மும்பை இந்தியன்ஸ் அணியில் (Mumbai Indians) நிலவும் குழப்பம்தான் ஐபிஎல் தொடரை சுற்றியிருக்கும் எதிர்பார்ப்புகளுக்கான முக்கிய காரணமாகும். குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை டிரேடிங் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி பணம் கொடுத்து வாங்கியது. அதன்மூலம், ஹர்திக் பாண்டியா (Hardik Pandya) வரும் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாடுவார் என முதலில் ரசிகர்களுக்கு அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் கலந்து செய்தி கொடுக்கப்பட்டது. 


தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாகவும் ஹர்திக் பாண்டியா செயல்படுவார் என அந்த அணி உறுதிப்படுத்தியது. இதனால் ரோஹித் சர்மா அணியில் ஓரங்கட்டப்படுகிறார் என்றும் அவர் வேறு ஒரு அணிக்கு கேப்டனாக மாறப்போகிறார் எனவும் தொடர்ந்து ரசிகர்கள் தரப்பில் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 5 முறை கோப்பையை வென்று கொடுத்த ரோஹித் சர்மாவை சட்டென கேப்டன் பதவியில் இருந்து தூக்குவது சரியாகாது என ரசிகர்கள் கருதுகின்றனர். 


மேலும் படிக்க | மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அடுத்த பின்னடைவு..! முக்கிய வீரர் விலகல்?


கொந்தளிக்கும் ரோஹித் சர்மா ரசிகர்கள்


அந்த வகையில், தற்போது புது பூகம்பம் சமூக வலைதளங்களில் கிளம்பி உள்ளது. அதாவது இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ நேற்று அறிவித்திருந்தது. 16 வீரர்களின் விவரங்கள் அடங்கிய பதிவை ஒரு புகைப்படத்துடன் மும்பை இந்தியன்ஸ் அணி இன்று காலை 11 மணிக்கு பதிவேற்றி இருந்தது. அதாவது அந்த பதிவில்,"ஸ்குவாட் குறித்து என்ன நினைக்கிறீர்கள், பல்தான்ஸ்" என அதில் குறிப்பிட்டிருந்தனர். தற்போது இந்த பதிவுதான் பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. 



அதாவது அந்த புகைப்படத்தில் கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஆனால், அதில் ரோஹித் சர்மாவின் புகைப்படம் இல்லாததுதான் பலரையும் கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளதாக தெரிகிறது. அனைத்து ஐபிஎல் அணிகளும் இதேபோன்று பதிவுகளை போட்டாலும் அதில் தங்கள் அணிக்காக விளையாடும் நட்சத்திர வீரர்களின் புகைப்படங்களைதான் பயன்படுத்தும். அந்த வகையில், இந்திய அணி கேப்டன் என்ற முறையிலும் இல்லாமல், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஐந்து முறை கோப்பையை வென்றுகொடுத்த கேப்டன் என்ற முறையிலும் இல்லாமல் அவரின் புகைப்படம் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.



ரோஹித் மும்பை இந்தியன்ஸ் இல்லையா...?


ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியில் இல்லையா என்று ஒரு X தளத்தின் பயனர் கேள்வி எழுப்பி உள்ளார். ரோஹித் சர்மா மீதான வன்மத்தை இது காட்டுகிறது என ஒரு பயனர் பதிவிட்டுள்ளார். அதாவது மற்ற அணிகள் கூட ரோஹித் சர்மாவின் புகைப்படத்தை பயன்படுத்தாமல் இருப்பதை கூட புரிந்துகொள்ளலாம், ஆனால் மும்பை அணியே ரோஹித் புகைப்படத்தை புறக்கணிப்பது என்பது சற்றும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனவும் ஒரு பயனர் பதிவிட்டிருந்தார்.



மேலும் படிக்க | அரசியலில் இருந்து அம்பதி ராயுடு விலக மும்பை இந்தியன்ஸ் தான் காரணம்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ