மும்பை: இந்தியன் பிரீமியர் லீக்கின் 2020 தொடர் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் நவம்பர் 8 ஆம் தேதி வரை நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகக் குழுவின் தலைவர் பிரிஜேஷ் படேல் இன்று (ஜூலை 24) உறுதிப்படுத்தினார். IPL 13 சீசன் அனைத்து போட்டிகளும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் எனவும் தெரிவித்தார். ஆனாலும் IPL தொடர் நடத்துவது குறித்து அரசு தரப்பில் இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. அடுத்த வாரம் ஐபிஎல் கவர்னர் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அதன் பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் எனத் தெரிகிறது. எவ்வாறாயினும், ஐபிஎல் 2020 தொடர் UAE-ல் நடைபெறுவது உறுதியாகி உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வாரத்தின் தொடக்கத்தில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் IPL 13 வது சீசன் நடைபெறுமா என்பது குறித்து பெரும் கேள்விக்குறியாக இருந்தது. ஆனால் ஐ.சி.சி. (ICC) தரப்பில் இருந்து டி-20 ஆண்கள் உலகக்கோப்பை ஒத்தி வைக்கப்பட்டது என அறிவிப்பு வெளியான நாளில் இருந்து, ஐபிஎல் போட்டி குறித்து செய்திகள் இடம் பெறத்தொடங்கின. 


ALSO READ |  IPL 2020: செப்டம்பர் 19 ஆம் தேதி UAE-ல் துவக்கம், நவம்பர் 8 அன்று இறுதிப்போட்டி!!


ஐபிஎல் கவர்னர் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில், அணிகள் பயணம், போட்டியின் முழு அட்டவணை மற்றும் எந்த நேரத்தில் போட்டி நடத்துவது போன்ற முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.


செப்டம்பர் 19 ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி இறுதிப் போட்டி நவம்பர் 8 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை என மொத்தம் 51 நாட்கள் IPL 13 சீசன் போட்டிகள் நடைபெறும். 


ALSO READ |  ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற உள்ள ஐபிஎல் 2020 தொடர்.. அனுமதி கேட்கும் பி.சி.சி.ஐ.


ALSO READ |   கொரோனா காரணமாக ICC டி-20 உலக கோப்பை ஒத்திவைப்பு.. IPL 2020 தொடர் உறுதி