மும்பை அணிக்கு மேலும் பின்னடைவு! என்ன செய்ய போகிறார் ஹர்திக் பாண்டியா?
Suryakumar Yadav: மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர பேட்டர் சூர்யகுமார் யாதவ் காயத்தில் இருந்து குணமாக இன்னும் சில நாட்கள் ஆகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
Suryakumar Yadav Injury Update: ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் சூர்யகுமார் யாதவ் தற்போது காயத்தில் இருந்து குணமடைந்து வருகிறார். தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தொடரின் போது காயம் ஏற்பட்ட சூர்யகுமார் யாதவ் அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதனால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரிலும் அவர் ஐடம் பெறவில்லை. முன்னதாக ஐபிஎல்லின் தொடக்க ஆட்டத்தில் சூர்ய விளையாட மாட்டார் என்று கூறப்பட்டது. மும்பை அணி விளையாடுள்ள முதல் இரண்டு லீக்கில் ஆட்டங்களிலும் தோல்வியடைந்துள்ளது. ஐபிஎல் ஆரம்பிக்கும் முன்பு, மும்பை தலைமை பயிற்சியாளர் மார்க் பவுச்சர் சூர்யகுமார் யாதவ் உடற்தகுதி குறித்த முழு விவரம் தெரியவில்லை என்று கூறி இருந்தார்.
மேலும் படிக்க | டி20 கிரிக்கெட்னா இதான்டா... ஹைதராபாத் vs மும்பை போட்டியில் படைக்கப்பட்ட சாதனைகள்
இந்தியா மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய வீரராக இருக்கும் சூர்யகுமார் யாதவ் காயம் இன்னும் சரியாகவில்லை என்றும், ஐபிஎல்லில் விளையாட இன்னும் சில நாட்கள் ஆகலாம் என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது. பிசிசிஐயின் மருத்துவ குழு சூர்யகுமார் யாதவ் உடல்நிலை குறித்து தீவிர கண்காணிப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த மூன்றாவது டி20 போட்டியில் 56 பந்துகளில் 100 ரன்கள் எடுத்தபோது கணுக்காலில் காயம் ஏற்பட்டு இரண்டு அறுவை சிகிச்சைகளை எடுத்துக்கொண்டார். எவ்வாறாயினும், இந்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு முன் அவர் குணமாக வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டி வருகின்றனர்.
"சூர்யகுமார் யாதவ் நல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறார், விரைவில் அவர் மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுவார். இருப்பினும், முதல் இரண்டு போட்டிகளை தவறவிட்டது போல அவர் இன்னும் சில போட்டிகளை தவறவிட கூடும்" என்று பிசிசிஐ வட்டாரம் தெரிவித்துள்ளது. டி20 போட்டிகளில் இந்திய அணியின் துருப்பு சீட்டாக சூர்யகுமார் யாதவ் இருந்து வருகிறார். 171.55 என்ற அற்புதமான ஸ்ட்ரைக் ரேட்டைக் கொண்டுள்ள சூர்யகுமார் யாதவ் இந்தியாவுக்காக 60 டி20 போட்டிகளில் 4 சதங்கள் உட்பட 2141 ரன்கள் எடுத்துள்ளார்.
மும்பை அணி
இந்த ஆண்டு ரோஹித் சர்மாவிற்கு பதிலாக ஹர்திக் பாண்டியா மும்பை அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். அவரின் தலைமையில் மும்பை அணி விளையாடி உள்ள முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்து உள்ளது. அகமதாபாத்தில் நடைபெற்ற குஜராத் அணிக்கு எதிரான முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. நேற்று ஹைதராபாத் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 277 ரன்கள் என்ற இமாலய இலக்கை எதிர்த்து களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 246 ரன்கள் மட்டுமே அடித்தது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ