IPL 2025, Chennai Super Kings News: வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்க உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடங்க இருக்கிறது. இந்த தொடரை கிரிக்கெட் உலகமே மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறது எனலாம். சாம்பியன்ஸ் டிராபி தொடரை (Champions Trophy 2025) நிறைவடைந்ததும், ஐபிஎல் 2025 தொடர் மார்ச் மாதம் 21ஆம் தேதி இந்தியாவில் நடைபெற இருக்கிறது. ஒரு ஐசிசி தொடருக்கு இணையாக ஐபிஎல் தொடருக்கும் கடும் எதிர்பார்ப்பு இருக்கிறது எனலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த ஐபிஎல் தொடரில் (IPL 2025) பல அணிகள் மீது பல்வேறு எதிர்பார்ப்புகள் இருந்தாலும், அதில் முதனைமையானது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவே இருக்கும். தோனி இந்த சீசனிலும் விளையாடுவது அவரது ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. மேலும், அஸ்வின் மீண்டும் சிஎஸ்கேவுக்கு திரும்பியிருப்பதால் மீண்டும் தோனி - அஸ்வின் - ஜடேஜா கூட்டணி களத்தில் பார்க்கவும் சிஎஸ்கே ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ஆர்வலர்களுமே காத்திருக்கின்றனர்.


ஐபிஎல் 2025: எதிர்பார்ப்பில் சிஎஸ்கே ரசிகர்கள்


மேலும், தோனிக்கு இது கடைசி சீசனாக கூட அமையலாம் (?), எனவே ருதுராஜ் தலைமையில் 6வது முறையாக சிஎஸ்கே சாம்பியன் பட்டத்தை வென்று, அத்துடன் தோனி ஓய்வை அறிவிப்பதுதான் சரியாக இருக்கும் என பலரும் கருதுகின்றனர். மேலும், அஸ்வினுக்கும் 38 வயதாகவிட்டதால் அவரையும் ஓரிரு சீசன்களில்தான் இனி பார்க்க முடியும். எனவே, இந்த 2025 தொடரை மிக முக்கியமான ஒன்றாக சிஎஸ்கே ரசிகர்கள் கருதுகின்றனர்.


மேலும் படிக்க | சிஎஸ்கே-விற்கு தலைவலியாய் அமையும் முன்னாள் வீரர்! இரட்டை சதம் அடித்து அசத்தல்!


ஐபிஎல் 2025: டெவான் கான்வேவுக்கு காயம்


அப்படியிருக்க, சிஎஸ்கேவின் (Chennai Super Kings) முதன்மையான பிளேயிங் லெவனில் கேப்டன் ருதுராஜ் உடன் ஓப்பனிங் இறங்குவார் என கருதப்படும் டெவான் கான்வே தற்போது காயத்தில் சிக்கியிருப்பது பெரும் சிஎஸ்கே ரசிகர்களின் நெஞ்சில் பேரிடியாக இறங்கியுள்ளது. தென்னாப்பிரிக்காவின் டி20 தொடரான SA20 லீக் போட்டியில் கான்வே ஜோகனஸ்பெர்க் சூப்பர் கிங்ஸ் (JSK) அணிக்காக விளையாடி வருகிறார். நேற்று முன்தினம் பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் அணியுடனான ஜேஎஸ்கே அணி மோதியது.



அப்போது முதல் பேட்டிங்கின்போது, ஜேஎஸ்கே கேப்டன் பாப் டூ பிளெசிஸ் அடித்த பந்து நேராக எதிர்முனையில் நின்றுகொண்டிருந்த டெவான் கான்வேவின் (Devon Conway) மீது பலமாகப்பட்டது. உடனே அவர் களத்தை விட்டு வெளியேறினார். இருப்பினும் 8வது ஓவரில் மீண்டும் வந்த அவர் 9(10) ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.


ஐபிஎல் 2025: டெவான் கான்வே விலகலா...?


டெவான் கான்வே பேட்டிங்கின் போதும் அசௌகரியமாக உணர்ந்தார் என்றே கூறப்படுகிறது. இதனால், அவர் எதிர்வரும் போட்டிகளில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இன்றைய பார்ல் ராயல்ஸ் அணியுடனான போட்டியில் விளையாடுகிறாரா இல்லையா என்பதை பொறுத்தே அவரது காயத்தின் நிலையை அறிய முடியும். அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்து ஸ்குவாடில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. 


ஒருவேளை கான்வே, கடந்த சீசனை போல இந்த சீசனிலும் காயம் காரணமாக வெளியேறினால் அவருக்கு பதில் வேறு எந்த வெளிநாட்டு ஓப்பனரை சிஎஸ்கே அணி எடுக்கும் என்பதுதான் அடுத்த பெரிய கேள்வியாக உள்ளது. சிஎஸ்கே அணி தற்போது மற்றொரு வெளிநாட்டு ஓப்பனராக ரச்சின் ரவீந்திரா இருந்தாலும் கூட, கான்வேவுக்கு மாற்றாக ஒரு மற்றொரு தொடக்க வீரரை எடுக்கவே சிஎஸ்கே நினைக்கும். 


ஐபிஎல் 2025: டெவான் கான்வேவுக்கு மாற்று வீரர் யார்?


அந்த வகையில், இங்கிலாந்து அணியின் அதிரடி பேட்டர் பென் டக்கெட், நியூசிலாந்து அதிரடி பேட்டர் ஃபின் ஆலன் ஆகியோரில் ஒருவரை எடுக்கவே அதிக வாய்ப்புள்ளது. இவர்கள் இருவரும் ஐபிஎல் மெகா ஏலத்தில் பதிவு செய்திருந்த நிலையில், அவர்களை யாருமே எடுக்காதது இங்கு குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | IND vs ENG: இந்திய அணி செய்த பெரிய தவறுகள்... தொடரை வெல்ல இனி என்ன செய்யணும்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ