India vs South Africa 3rd T20, Playing XI Changes: பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர் மற்றும் ஐபிஎல் 2025 மெகா ஏலம் பரப்பரப்புக்கு மத்தியில் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் போய்கொண்டிருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுவரை 2 போட்டிகள் நிறைவடைந்துவிட்டன. முதல் போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியும் வென்று தொடரை 1-1 என்ற கணக்கில் தற்சமயம் சமன் செய்துள்ளன. நடந்து முடிந்த இரண்டு போட்டிகளிலும் இந்தியா முதலில்தான் பேட்டிங் செய்தது. முதல் போட்டியில் சஞ்சு சாம்சனின் சதம், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மாவின் அதிரடிகள் கைகொடுக்க இந்திய அணி 200 ரன்களை தாண்டி ஸ்கோர் செய்தது. இந்திய அணியின் பின்வரிசை கடுமையாக சொதப்பியது. வருண் சக்ரவர்த்தி, ரவி பிஷ்னோய் சுழலில் சிக்கி தென்னாப்பிரிக்கா அந்த போட்டியை பரிதாபமாக இழந்தது. 


தவறவிட்ட இந்திய அணி


ஆனால், இரண்டாவது போட்டியில் இந்திய ஆர்டரே ஆட்டம் கண்டுவிட்டது. அந்த ஆடுகளத்தில் இந்திய அணி வீரர்கள் ரன் குவிக்க திணறினர். ஹர்திக் பாண்டியா கடைசி கட்டத்தில் பந்துகளை வீணாக்கியது பெரிதும் விமர்சனத்திற்கு உள்ளானது. அவர் 45 பந்துகள் பேட்டிங் செய்து 4 பவுண்டரி, 1 சிக்ஸர் என 39 ரன்களை குவித்தார். இதனால் இந்திய அணி 125 ரன்களைதான் இலக்காக நிர்ணயித்தது. அந்த 125 ரன்களையும் தென்னாப்பிரிக்கா தட்டுத்தடுமாறியே அடித்தது. இந்த போட்டியிலும் வருண் சக்ரவர்த்தி தென்னாப்பிரிக்க அணியின் முக்கிய 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 


மேலும் படிக்க | ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்த வீரர்களுக்கு தான் ஜாக்பாட்... பட்டையை கிளப்பும் 5 இந்திய பாஸ்ட் பௌலர்கள்!


டி20 போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுப்பது அரிதினும் அரிது என்ற சூழலில் வருண் அந்த மாயாஜாலத்தை அங்கு நிகழ்த்தினார். இருப்பினும், இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் அந்த வாய்ப்பை முழுவதுமாக தவறவிட்டனர். இதனால், நாளை சென்சூரியன் நகரில் நடைபெறும் மூன்றாவது டி20 மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நாளைய போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரில் முன்னிலை பெறும். 


அக்சர் பட்டேல் வேண்டாவே வேண்டாம்


அந்த வகையில், நாளைய போட்டியில் இந்திய அணியில் முக்கிய மாற்றம் செய்யப்பட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன. அதாவது, இந்திய பிளேயிங் லெவனில் அக்சர் பட்டேல்லை நீக்கிவிட்டு அறிமுக வீரரான ரமன்தீப் சிங்கை உள்ளே கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. அக்சர் பட்டேல் இந்திய அணி டி20 உலகக் கோப்பையை கைப்பற்ற முக்கிய பங்காற்றியவர், கடந்த போட்டியிலும் பேட்டிங்கில் நிலைத்து நின்று விளையாடினார். அப்படியிருக்க அவரை ஏன் நீக்க வேண்டும் என்ற எதிர்கேள்விகளும் கிளம்பின.


ஏன் ரமன்தீப் சிங் வேணும்? 


இந்நிலையில், முன்னாள் இந்திய வீரர் ராபின் உத்தப்பா கூறுகையில்,"நம்பர் 8இல் ஒரு ஆல்-ரவுண்டர் வேண்டும் என்றுதான் எதிர்பார்க்கிறீர்கள். அதாவது பந்துவீசக்கூடிய ஒரு பேட்டர். ஹர்திக் பாண்டியா இருக்கும்போது மற்ற ஸ்லாட்டில் ஸ்பின்னோ, பாஸ்ட் பௌலிங்கோ யாரையும் வேண்டுமானாலும் எடுக்கலாம். அதுதான் ஒரு இடைவெளியை நிரப்பும். ஆனால் இப்போது அப்படி அழுத்தம் இல்லை. எனவே, நீங்கள் ரமன்தீப்பை உள்ளே கொண்டு வரலாம். அவரை பிளேயிங் லெவனில் விளையாட வைக்க வேண்டும்" என்றார். 


ரமன்தீப் சிங் ஐபிஎல் தொடர் மூலம் கவனம் பெற்றவர். இவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்தார். கடந்த மினி ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இவரை எடுத்தது. கீழ் வரிசை பேட்டர்களில் ஒரு முக்கிய ஸ்பாட்டை கொடுத்தது. இவரின் மித வேகப்பந்துவீச்சும், பீல்டிங் திறனும் மெச்சத் தகுந்ததாகும்.


மேலும் படிக்க | இஷான் கிஷனுக்கு பதில் இந்த சிஎஸ்கே வீரரை டார்கெட் செய்யும் மும்பை அணி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ