IND vs ZIM 2nd T20 Latest Updates: கடந்த வாரம் இந்திய கிரிக்கெட் அணி, ஐசிசி டி20 உலகக் கோப்பையை 17 ஆண்டுகால போராட்டத்திற்கு பின்னர் மீண்டும் கைப்பற்றிவிட்டது என்ற ஆனந்ததில் ரசிகர்கள் திளைத்திருந்தனர். ஆனால் அவர்களின் கொண்டாட்டத்திற்கும், மகிழ்ச்சிக்கும் முட்டுக்கட்டை போடும் வகையில் நேற்று அந்த சம்பவம் நடந்தது. ஜிம்பாப்வே அணியிடம் சுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து பின்னடைவை சந்தித்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது முதல் தோல்வி அல்ல...


ஜிம்பாப்வே அணியிடம் சர்வதேச டி20 போட்டிகளில் தோல்வியடைவது இந்தியாவுக்கு புதிதல்ல என்றாலும் டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றிருக்கும் நிலையில், இளம் அணி இப்படி படுதோல்வி அடைந்திருப்பதை பலராலும் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. இதற்கு முன்னதாக, 2015ஆம் ஆண்டில் இதே ஹராரே மைதானத்தில் ரஹானே தலைமையிலான இந்திய அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயிடம் வீழ்ந்தது. டி20 போட்டிகளில் ஜிம்பாப்வேயிடம் இந்தியா அடைந்த முதல் தோல்வி இதுதான்.


பேட்டிங்தான் சொதப்பல்


அதேபோல் 2016இல் தோனி தலைமையிலான இந்திய அணி இதே ஹாராரே மைதானத்தில் 2 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. அதற்கு பின் தற்போது தோல்வியடைந்திருக்கிறது, மூன்று தோல்விகளும் இந்திய அணிக்கு ஹராரே மைதானத்தில்தான் நடந்ததுள்ளது. தோனி தலைமையிலேயே இந்திய அணியே, ஜிம்பாப்வே அணியிடம் தோல்வியடைந்திருக்கும் நிலையில் சுப்மன் கில் இளம் கேப்டன் என்பதால் இதில் அவரின் தவறு ஏதும் இல்லை. நேற்றைய போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு நன்றாகவே இருந்தது, பேட்டிங்தான் சொதப்பிவிட்டது.


மேலும் படிக்க | IND vs ZIM : ஜிம்பாப்வே வெற்றி..! 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வி


அபிஷேக், ரின்கு டக்...!


நேற்றைய போட்டியில் கேப்டன் சுப்மன் கில் 31, வாஷிங்டன் 27, ஆவேஷ் கான் 16 என மூன்று பேர் மட்டுமே ஓரளவுக்கு போராடினர். மற்ற அனைவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறியது கடும் ஏமாற்றத்தை அளித்தது. அதுவும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அபிஷேக் சர்மா, ரின்கு சிங் ஆகியோர் டக்அவுட்டானது சமூக வலைதளங்களில் பெரிதும் விமர்சனத்திற்கு உள்ளானது. ரின்கு சிங் பல இதுவரை பல போட்டிகளில் தன்னை நிரூபித்திருக்கிறார் என்றாலும் சர்வதேச அரங்கில் அறிமுகமாகும் அபிஷேக் சர்மா இப்படி பொறுப்பற்ற வகையில் அவுட்டானது விமர்சிக்கப்பட்டு வருகிறது. 


ஜெய்ஸ்வாலும், சாய் சுதர்சனும்...


குறிப்பாக, அபிஷேக் சர்மாவின் ஐபிஎல் மற்றும் உள்ளூர் போட்டிகளின் ஃபார்மை அடுத்துதான் அவர் தற்போது இந்த தொடருக்கு தேர்வு செய்யப்பட்டார். முதல் போட்டிதானே இன்னும் கொஞ்சம் வாய்ப்பு கொடுக்கலாம் என நாம் கூறினாலும் வரும் மூன்றாவது போட்டி முதல் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அணிக்குள் வந்துவிடுவார். இந்திய அணி அவர் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள நிலையில், அபிஷேக் இப்படி சொதப்பினால் நிச்சயம் அவருக்கு இந்திய அணியில் இடமில்லாமல் போகும். அபிஷேக் சர்மாவின் இடத்திற்கு இப்போதே மற்றொரு இடதுகை பேட்டரான சாய் சுதர்சன் கடும் போட்டியளிப்பார். எனவே அபிஷேக் உஷாராக இல்லாவிட்டால் இந்திய அணியில் இடத்தை பறிகொடுப்பார் என்கின்றனர் ரசிகர்கள்.


அபிஷேக் சர்மாவுக்கு கடைசி வாய்ப்பா...!


மேலும் இன்றைய போட்டியில் அபிஷேக் சர்மா விளையாடுவாரா அல்லது ஜெய்ஸ்வாலின் வருகைக்கு முன் சாய் சுதர்சனுக்கு ஒரு வாய்ப்பை அளிக்கலாமா என இந்திய அணி யோசிக்கும். குறிப்பாக, ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக ஒன்றாக விளையாடும் கில் மற்றும் சாய் சுதர்சன் இடையே நல்ல புரிதல் கொண்ட ஆட்ட அனுபவமும் இருப்பதால் சாய் சுதர்சனுக்கு கில் ஒரு வாய்ப்பை இன்று வழங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 


எனினும், இன்றைய போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் மாற்றம் ஏதும் இருக்காது எனலாம். அபிஷேக் சர்மாவுக்கு இன்றும் ஒரு வாய்ப்பு வழங்கப்படலாம், இதுவே அவரின் கடைசி வாய்ப்பாகவும் இருக்கலாம். இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் மோதும் 2ஆவது டி20 போட்டி ஹராரே நகரில் இன்று நடைபெறுகிறது. இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு போட்டி தொடங்கும். 


மேலும் படிக்க | ரோகித் சர்மாவை ஸ்பெஷலாக கவனித்த அம்பானி - கூட இருந்த அந்த 2 பேருக்கும் ஜாக்பாட்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ