NZ vs SL Match Updates: நடப்பு ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்று போட்டிகள் அதன் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன. அதில், நியூசிலாந்து - இலங்கை அணிகள் இன்று மோத உள்ள நிலையில், இரு அணிகளுக்கும் இதுதான் கடைசி லீக் போட்டியாகும். இலங்கை அணி அரையிறுதி ரேஸில் இருந்து வெளியேறிவிட்ட நிலையில், நியூசிலாந்து அணி தனது நான்காவது இடத்தை தக்கவைத்துக்கொள்ள இந்த போட்டி முக்கியமானதாகும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நெட் ரன்ரேட்டை அதிகளவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதால் நியூசிலாந்து அணி டாஸை வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. கடந்த போட்டியில் 400 ரன்களை தாண்டியும் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்ததால் நியூசிலாந்து இந்த போட்டியை வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நோக்கில் பந்துவீசியது. அதற்கு தொடக்கத்திலேயே பலனும் கிடைத்தது எனலாம். 


முதல் பவர்பிளேயிலேயே பதும் நிசங்கா 2, குசால் மெண்டிஸ் 6, சதீரா சமரவிக்ரம 1, அசலங்கா 8 என அடுத்தடுத்து அவுட்டாகினாலும், குசால் பெரேரா 22 பந்துகளில் அரைசதம் அடித்து மிரட்டினார். இருப்பினும், அவரின் 28ஆவது பந்தில் 51 ரன்களுக்கு அவுட்டாக முதல் 10 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 70 ரன்களை எடுத்தனர்.


மேலும் படிக்க | இந்தியாவை வீழ்த்த இது ஒன்றுதான் வழி... எதிரணிகளுக்கு கில்கிறிஸ்ட் கொடுத்த ஐடியா - என்ன தெரியுமா?


அடுத்து களமிறங்கிய ஏஞ்சலோ மேத்யூஸ் சிறிது நேரம் களத்தில் இருந்தாலும் அவர் 16 ரன்களிலும், தனஞ்செயா டி செல்வா 19 ரன்களிலும் அவுட்டாகினர். தொடர்ந்து, சமிகா கருணாரத்னேவும் 6 ரன்களில் வெளியேற தீக்ஷனாவுடன் துஷ்மந்தா சமீராவும் சிறிது பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். இந்த ஜோடி 10 ஓவர்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து 15 ரன்களையே எடுத்தனர். அதில் சமீரா 1 ரன் மட்டும் எடுத்து அவுட்டானார். தீக்ஷனாவுடன் அடுத்து வந்த மதுஷங்காவும் ஒரு நீண்ட பார்ட்னர்ஷிப்பை அமைத்தார். அந்த ஜோடி விரைவாக அவுட்டாகும் என எதிர்பார்க்கப்பட்டது. 


ஆனால், சுமார் 15 ஓவர்கள் வரை விளையாடிய இந்த ஜோடி 43 ரன்களை குவித்தது. கடைசியாக மதுஷங்கா 19 ரன்களில் அவுட்டாக, இலங்கை அணி 46.4 ஓவர்களில் 171 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. தீக்ஷனா 91 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 38 ரன்களை எடுத்து அட்டமிழக்காமல் இருந்தார். நியூசிலாந்து பந்துவீச்சில் பவுல்ட் 3 விக்கெட்டுகளையும், பெர்குசன், சான்ட்னர், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 


குறைந்த இலக்கு என்பதால் நியூசிலாந்து அணி விரைவாக இதனை அடித்தால் அரையிறுதி கனவோடு இருக்கும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானுக்கு பெரும் பின்னடைவை கொடுக்கும். ஏற்கெனவே, நியூசிலாந்து நல்ல ரன்ரேட்டில் இருப்பதால் அந்த அணிக்கே அரையிறுதிக்கு அதிக வாய்ப்புள்ளது. எனவே, நவ. 15ஆம் தேதி வான்கடேவில் நடைபெறும் முதல் அரையிறுதியில் இந்தியாவுடன் நியூசிலாந்து மோதலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2019 உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின, அதில் இந்தியா தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | முகமது ஷமியை திருமணம் செய்து கொள்ள தயார்... ஆனால் ஒரு கண்டிஷன் - பிரபல பாலிவுட் நடிகை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ