IND vs BAN Match: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடர் (ICC T20 World Cup 2024) தற்போது நடைபெற்று வருகிறது. குரூப் சுற்று போட்டிகள் நிறைவடைந்து தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்று காலை குரூப் 2 பிரிவில் மேற்கு இந்திய தீவுகள் - அமெரிக்கா அணிகள் மோதி வருகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தொடர்ந்து, குரூப் 1 பிரிவில் இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதும் போட்டி இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்று வருகிறது. சூப்பர் 8 பிரிவில் இரண்டு அணிகளும் தலா 1 போட்டியை விளையாடி உள்ளன. இந்திய அணி ஆப்கானிஸ்தான் உடன் வெற்றி பெற்ற நிலையில், வங்கதேச அணி ஆஸ்திரேலியாவுடன் தோல்வியடைந்தது. எனவே, அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ய வேண்டுமென்றால் இரு அணிகளுக்கும் இது முக்கியமான போட்டியாகும்.


அதிர்ச்சி அளிக்குமா வங்கதேசம்?


இந்திய அணி இந்த போட்டியை வென்றால் வரும் ஜூன் 24ஆம் தேதி நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தோற்றாலும் பெரியளவில் பிரச்னை ஏற்படாது, அரையிறுதிக்கு தகுதிபெறவும் அதிக வாய்ப்பு உருவாகும். எனவே இந்திய அணி இந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக்கொள்ள விரும்பும். டி20 உலகக் கோப்பையில் இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான போட்டி என்றாலே சுவாரஸ்யதிற்கும், பரபரப்புக்கும் பஞ்சம் இருக்காது. 2016இல் தோனியின் கடைசி பந்து ரன்-அவுட்டை யாரால் மறக்க முடியும்...?


மேலும் படிக்க | டி20 உலக கோப்பை : இந்தியா - வங்கதேசம் போட்டி மழையால் பாதிக்கப்பட்டால், ரோகித் சர்மாவுக்கு சிக்கல்


வங்கதேச அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. பேட்டிங்கில் ஓரளவு கடினமான இலக்கை நிர்ணயித்தால் அவர்களின் பந்துவீச்சால் இந்திய அணியை கட்டுப்படுத்திவிட முடியும் எனலாம். டன்சிம் ஹாசன் ஷாகிப், டஸ்கின் அகமது, முஸ்தபிசுர் ரஹ்மான் ஆகியோரிடம் இருந்து விராட் கோலி - ரோஹித் சர்மா ஆகியோர் தப்பிப்பது சிரமம்தான். அவர்களின் சுழற்பந்துவீச்சும் பலமாகவே காணப்படுகிறது. குரூப் சுற்றில் இலங்கையை வீழ்த்திய அதே பார்முலாவை கொண்டு இன்று இந்திய அணிக்கும் வங்கதேசம் அதிர்ச்சி அளிக்கலாம்.


சஞ்சு சாம்சன் வரணும்...


இருப்பினும், இந்திய அணி எச்சரிக்கையுடன் சில மாற்றங்களை செய்தால் நிச்சயம் இந்த அதிர்ச்சியை தவிர்க்கலாம். இன்று சிவம் தூபேவுக்கு பதில் சஞ்சு சாம்சனை களமிறக்கினால் மிடில் ஆர்டர் இன்னும் பலமாகும். சூர்யகுமார், ஹர்திக் பாண்டியா ஆகியோருடன் சஞ்சு கைக்கோர்த்தால் ரன் வேகமும் அதிகரிக்கும். எனவே, சிவம் தூபேவை வெளியே வைத்தால் மட்டுமே அது சரியாகும். 


மேலும், கூடுதல் பேட்டிங் ஆப்ஷன் வேண்டுமென்றால் ஜடேஜாவுக்கு பதில் ஜெய்ஸ்வாலை கூட களமிறக்கலாம். அவர் ஓப்பனிங் இறங்கி வெளுத்து வாங்க வாய்ப்புள்ளது. ஜெய்ஸ்வால் ஓப்பனிங் என்றால் விராட் நம்பர் 3, பண்ட் நம்பர் 4, சூர்யா நம்பர் 5 என்ற சிக்கல் வருவதையும் தவிர்க்க இயலாது. எனவே, அரையிறுதிக்கு தகுதிபெறவும், இனி வரவிருக்கும் போட்டிகளுக்கான சிறந்த காம்பினேஷனை அமைக்கவும் இந்த போட்டி மிக முக்கியமானதாகும். 


IND vs BAN: எங்கு, எப்போது பார்ப்பது?


இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதும் சூப்பர் 8 சுற்று போட்டி ஆன்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு போட்டி தொடங்கும். இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலிலும், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் காணலாம். 


மேலும் படிக்க | டி20 உலகக்கோப்பை : பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் மேட்ச் பிக்சிங் செய்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ