ஆஸ்திரேலியாவுக்குள் என்ட்ரி ஆகும் இந்த வீரர்... இந்திய அணிக்கு பெரிய நெருக்கடி - ஏன் தெரியுமா?
India vs Australia: ஆஸ்திரேலிய அணி தங்களது ஸ்குவாடில் பியூ வெப்ஸ்டர் என்ற வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டரை சேர்த்துள்ளது. இதனால், இந்திய அணிக்கு என்ன நெருக்கடி உருவாகும் என்பதை இங்கு விரிவாக காணலாம்.
India vs Australia Test Series: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர் (Border Gavaskar Trophy) தற்போது நடைபெற்ற வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி நிறைவடைந்து விட்ட நிலையில், அனைவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியை எதிர்பார்த்து வருகின்றனர். பெர்த் நகரில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், ஆஸ்திரேலியா அடுத்து அடிலெய்ட் ஓவல் (Adelaide Oval) மைதானத்தில் தனது பதிலடியை கொடுக்கவும் திட்டமிட்டுள்ளது.
அந்த வகையில், ஆஸ்திரேலிய அணி (Team Australia) தனது ஸ்குவாடில் புதிய வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டரை சேர்த்துள்ளது. யார் இவர்?, இந்திய அணிக்கு எதிராக இவரின் தாக்குதல் எப்படி ஆஸ்திரேலிய அணிக்கு உதவும்? என்பதை இங்கு விரிவாக காணலாம்.
யார் இந்த பியூ வெப்ஸ்டர்?
இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் டிசம்பர் 6ஆம் தேதி அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. பகல் - இரவு ஆட்டமாக இந்த போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் பியூ வெப்ஸ்டர் ( Beau Webster) என்பவரை ஆஸ்திரேலியா அணி தனது ஸ்குவாடில் சேர்த்து இருக்கிறது.
மேலும் படிக்க | 2ஆவது டெஸ்டிலும் இந்த வீரர் விளையாட மாட்டார்... ஆனால் இந்திய அணிக்கு பிரச்னை இல்லை!
30 வயதான இவர் தெற்கு டாஸ்மானிய பகுதியை சேர்ந்தவர் ஆவார். இவர் கடந்த இரண்டு சீசன்களாக உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக கடந்த இரண்டு சீசன்களில் அவர் 1,788 ரன்கள் 51.08 சராசரியுடன் எடுத்துள்ளார். இதில் ஐந்து சதங்கள் மற்றும் 9 அரை சதங்கள் அடங்கும்.
கேமரூன் பேங்கிராப்ட் மட்டுமே இவரை விட பேட்டிங்கில் சிறப்பாக விளையாடி இருக்கிறார் எனலாம். இருப்பினும் இவரை ஆஸ்திரேலியா தனது ஸ்குவாடுக்குள் கொண்டு வருவதற்கு முக்கியமான காரணமே, அவரின் வேகப்பந்துவீச்சுதான் எனலாம். அவர் கடந்த சீசனில் மட்டும் முப்பது விக்கெட்டுகளை சரித்துள்ளார்.
வெப்ஸ்டர் வருவதால் என்ன பயன்?
ஆஸ்திரேலியா அணியில் தற்போது வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக மிட்செல் மார்ஷ் (Mitchell Marsh) மட்டுமே உள்ளார். லபுஷேனும் (Marnus Labuschagne) கடந்த போட்டியில் மற்ற வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஓய்வளிப்பதற்காக மீடியம் பேஸ்ஸில் மூன்று, நான்கு ஓவர்களை வீசினார். இருப்பினும் அதுவும் கைக்கொடுக்கவில்லை. கேமரூன் கிரீனுக்கு காயம் ஏற்பட்டுள்ள நிலையில், அணிக்குள் மற்றொரு வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டரை கொண்டு வருவது ஆஸ்திரேலியாவுக்கு பலம் சேர்க்கும் எனலாம்.
அதுமட்டுமின்றி அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் பகலிரவு ஆட்டத்தின் போது பந்து நன்கு ஸ்விங் ஆகும். எனவே இந்த சூழலில் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரை நிலைகுலைய செய்ய வெப்ஸ்டரின் பந்துவீச்சும் ஆஸ்திரேலியாவுக்கு கூடுதலாக பலம் அளிக்கும் எனலாம்.
ஆஸ்திரேலியா பிளேயிங் லெவன் மாற்றம்
ஏற்கனவே ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசில்வுட் என மூன்று வேகப்பந்துவீச்சாளர்களை கொண்டுள்ள ஆஸ்திரேலியாவில் இப்போது மிட்செல் மார்ஷ் உடன் வெப்ஸ்டரும் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக அணிக்குள் வந்தால் நிச்சயம் ஒரு பேட்டரையோ அல்லது சுழற்பந்துவீச்சாளரையோ வெளியே அமர வைக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். அந்த வகையில் அடுத்த போட்டியில் லபுஷேனுக்கு ஓய்வளித்துவிட்டு வெப்ஸ்டரை ப்ளெயின் லெவலில் சேர்க்க ஆஸ்திரேலியா திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மீளுமா இந்திய அணி?
அடிலெய்ட் ஓவல் மைதானம் இந்திய அணிக்கும் சரி, இந்திய அணி ரசிகர்களுக்கும் சரி பல ரணங்களை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2020-21 சுற்றுப்பயணத்தின் போது அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இதேபோன்ற பகல் இரவு ஆட்டத்தில்தான் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 36 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி ஒரு வரலாற்று தோல்வியை பதிவு செய்தது.
இந்த தோல்வியில் இருந்து முழுமையாக மீள்வதற்கு வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை தன்வசமாக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டியை கைப்பற்றுவதன் மூலம் தொடரில் ஆதிக்கம் செலுத்துவது மட்டுமின்றி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை மேலும் உறுதிப்படுத்தலாம்.
மேலும் படிக்க | டி20 உலக சாதனை சதம், ஐபிஎல் ஏலத்தில் யாரும் எடுக்கவில்லை - உர்வில் படேல் யார்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ