India National Cricket Team: இந்திய கிரிக்கெட் அணி டி20 உலகக் கோப்பையை வென்ற கையோடு தனது அடுத்தடுத்த இலக்குகளை நோக்கி பெரும் பாய்ச்சலை காட்டி வருகிறது. அடுத்தாண்டு இரண்டு ஐசிசி கோப்பைகளை கைப்பற்ற இந்தியாவுக்கு சிறப்பான வாய்ப்பு உள்ளது. பிப்ரவரியில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரும் (ICC Champions Trophy 2025), ஜூனில் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் (ICC World Test Championship Final 2025) இறுதிப்போட்டியும் நடைபெற இருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதில் சாம்பியன்ஸ் டிராபியை இப்போது விட்டுவிடுவோம். அடுத்து இந்திய அணி (Team India) 11 டெஸ்ட் போட்டிகளை விளையாட இருப்பதால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறுவதும், இறுதிப்போட்டியில் வெற்றிபெறுவதற்கும் பலமான அணியை கட்டமைப்பதே ரோஹித் மற்றும் கம்பீரின் முதல் பணியாகும். கடந்த 2021 மற்றும் 2023 ஆகிய இரண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்களிலும் இறுதிப்போட்டி வரை வந்த இந்திய அணி கோப்பையை கைப்பற்றாத நிலையில், இந்த முறை கோப்பையை கைப்பற்ற அனைத்து முயற்சியையும் மேற்கொள்ளும். 


டெஸ்ட் அணியின் பிரச்னைகள்


இந்திய டெஸ்ட் அணியில் சிற்சில பிரச்னைகள் இருக்கின்றன. அதில், மிடில் ஆர்டர் பேட்டிங் சற்று பிரச்னைக்குரியதாக உள்ளது. புஜாரா, ரஹானே ஆகியோர் விட்டுச்சென்ற இடத்தை இதுவரை நிரப்பப்படவில்லை. அதுமட்டுமின்றி விக்கெட் கீப்பர் பேட்டரும் பிரச்னைக்குரியதாக இருந்து வருகிறது. பேட்டிங்கில் இந்த பிரச்னைகளை தீர்ப்பது இந்திய அணிக்கு முக்கியமாகும். அந்த வகையில்தான் உள்ளூர் தொடரான துலிப் டிராபியை (Duleep Trophy 2025) பிசிசிஐ இந்த முறை மிகுந்த சிரத்தை உடன் நடத்துகிறது. 


மேலும் படிக்க | ரோஹித், விராட் இல்லை... துலிப் டிராபி அணிகள் அறிவிப்பு - யார் யாருக்கு வாய்ப்பு பாருங்க?


விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவிசந்திரன் அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்டோரை தவிர்த்து டெஸ்ட் அணியில் இடம்பெறக்கூடிய முன்னணி வீரர்கள் அனைவரும் துலிப் டிராபியில் விளையாட உள்ளனர். இந்த முறை துலிப் டிராபி தொடருக்கு நான்கு ஸ்குவாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சுப்மான் கில், அபிமன்யு ஈஸ்வரன், ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள நான்கு அணிகளில் மொத்தம் 61 வீரர்கள் உள்ளனர். 


இதில் உள்ளவர்களே இந்திய டெஸ்ட் அணியில் விளையாடுவார்கள். இந்நிலையில், இந்திய அணியில் நிலவும் மிடில் ஆர்டர் மற்றும் விக்கெட் கீப்பர் பிரச்னைகளை தீர்க்க இந்த வீரர்கள்தான் அதிகம் கவனிக்கப்படுவார்கள். துலிப் டிராபியில் இந்த வீரர்கள் சிறப்பாக விளையாடினால் மட்டுமே அவர்களுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கும். 


விக்கெட் கீப்பர்கள் பிரச்னை?


துருவ் ஜூரல், கேஎல், ராகுல், ரிஷப் பண்ட், இஷான் கிஷன், கேஎஸ் பரத் உள்ளிட்டோர் துலிப் டிராபியில் வெவ்வேறு அணிகளுக்காக விளையாடுகிறார்கள். இந்திய அணியில் விக்கெட் கீப்பிங் பிரச்னை நீண்ட நாள்களாக இருக்கிறது இவர்கள் 5 பேரில் சிறப்பாக செயல்படும் 2  வீரர்கள் மட்டுமே இந்திய அணியில் இடம்பெறுவார்கள். இதில் ரிஷப் பண்ட் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் இடது கை பேட்டர்கள் என்பதால் இருவரில் ஒருவருக்கு நிச்சயம் வாய்ப்பிருக்கிறது. 


மிடில் ஆர்டருக்கு யார்?


தேவ்தத் படிக்கல், ஷ்ரேயாஸ் ஐயர், ரஜத் பட்டிதர், சூர்யகுமார் யாதவ், சர்பராஸ் கான், ரியான் பராக், ஷிவம் தூபே ஆகியோர் இந்த துலிப் டிராபி தொடரில் அதிகம் கவனிக்கப்படுவார்கள். இவர்கள் தங்களின் ஃபார்மை நிரூபித்தால் மட்டுமே இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். மிடில் ஆர்டர் காம்பினேஷனை கண்டுபிடிக்க இந்த துலிப் டிராபி தொடர் பெரும் வாய்ப்பாக அமையும். இதில் சாய் சுதர்சன், முஷிர் கான், பாபா இந்திரஜித் ஆகியோர் கூடுதல் சிறப்பாக விளையாடும்பட்சத்தில் இந்திய அணியில் இவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கலாம். 


மேலும் படிக்க | ரோகித், கம்பீர் செய்யும் தவறால் அஸ்தமனமாகும் 4 கிரிக்கெட் வீரர்களின் எதிர்காலம்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ