India National Cricket Team: அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் இந்தியா - தென்னாப்பிரிக்கா டெஸ்ட் (IND vs SA Test Series) தொடர் நாளை (டிச. 26) முதல் தொடங்க இருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி சென்சூரியன் நகரில் நடைபெற உள்ளது. டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணியை, ரோஹித் சர்மா (Rohit Sharma) தலைமையிலான இந்திய அணி சந்திக்க உள்ளது. 2021-2022ஆம் ஆண்டுகளின் டிசம்பர், ஜனவரி மாதத்தில் இரு அணிகளும் தென்னாப்பிரிக்கா மண்ணில் மோதிக்கொண்ட பின், தற்போதுதான் டெஸ்ட் போட்டியில் மோத இருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உள்ளூர் அணியான தென்னாப்பிரிக்காவில் காயம் காரணமாக பல வீரர்கள் விளையாடாத நிலையில், சுற்றுப்பயணம் வந்திருக்கும் இந்திய அணிக்கும் அதே நிலைதான் எனலாம். இந்தியாவில் இஷான் கிஷன் (Ishan Kishan), ருதுராஜ் கெய்க்வாட், ஷமி ஆகியோர் முதலில் அணியில் அறிவிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டவர்கள். இதில் இஷான் கிஷனுக்கு மாற்றாக கேஎஸ் பரத்தும், ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு (Ruturaj Gaikwad) பதிலாக அபிமன்யூ ஈஸ்வரனும் மாற்று வீரர்களாக அறிவிக்கப்பட்டனர்.


இந்திய அணி (Team India) அறிவிக்கப்பட்டபோது ஷமி உடற்தகுதியில் சந்தேகம் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அவருக்கு மாற்று வீரராக இப்போது வரை யாரும் அறிவிக்கப்படவில்லை எனலாம். சிராஜ், பும்ரா ஆகியோர் நிச்சயம் பிளேயிங் லெவனில் இருப்பார்கள் என்பதால் முகேஷ் குமார் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோருக்கு இடையில்தான் போட்டி என்பது தெரிகிறது. இருப்பினும் ஷமிக்கு மாற்றாக ஒரு வீரரை பிசிசிஐ நிச்சயம் அறிவிக்க வேண்டி உள்ளது. 


மேலும் படிக்க | 2023இல் பிஸ்தா பௌலர்கள் இவர்கள்தான்... அதிக விக்கெட்டுகளை எடுத்த டாப் 5 வீரர்கள்!


அந்த வகையில், முகமது ஷமிக்கு (Mohammed Shami Replacement) சரியான மாற்று வீரராக அர்ஷ்தீப் சிங் இருப்பார் என்பதே வல்லுநர்களின் கருத்தாக உள்ளது. எனினும், அர்ஷ்தீப் சிங்கை, ஷமிக்கு மாற்று வீரராக அறிவிக்க முக்கிய மூன்று காரணங்களை இதில் காணலாம். 


சமீபத்திய ஃபார்ம்


அர்ஷ்தீப் சிங் (Arshdeep Singh) தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தொடர் நாயகன் விருதை வென்றிருந்தார், டி20 தொடரிலும் சிறப்பாக செயல்பட்டது குறிப்பிட்டார். அவர் சரியான ரிதமில் உள்ளதால் அவரை களமிறக்குவது இந்திய அணிக்கு டெஸ்ட் போட்டியிலும் கைக்கொடுக்கும்


இடது கை பௌலர்


அர்ஷ்தீப் சிங் இடது கை வேகப்பந்துவீச்சாளர் என்பது அவரை அணியில் நிச்சயம் இருக்க வேண்டும் என்பதற்கான முக்கிய காரணமாகும். இடது கை வேகப்பந்துவீச்சாளரான அவர் இரண்டு பக்கங்களிலும் ஸ்விங் செய்வது தென்னாப்பிரிக்காவுக்கு நெருக்கடியை அளிக்கும். அவரின் உயரமும் கூடுதல் பலனளிக்கும், தென்னாப்பிரிக்கா மண்ணில் அவரின் பந்துவீச்சுக்கு நல்ல பவுன்ஸ் கிடைக்கும்.  


நீண்ட பந்துவீச்சு


அர்ஷ்தீப் சிங் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் என வெள்ளை பந்து கிரிக்கெட்டுக்கு மட்டுமின்றி சிவப்பு பந்திலும் சமீப காலமாக தொடர்ந்து விளையாடி வருகிறார். சர்வதேச அளவில் இல்லாவிட்டாலும் கவுண்டி சாம்பியன்ஷிப்பில் விளையாடி வருகிறார், அதன் மூலம் நீண்ட ஓவர்களை வீச அவரால் இயலும். உள்ளூர் போட்டிகளிலும் அர்ஷ்தீப் சிங் சிறப்பாக வீசிக்கொண்டிருக்கிறார். 


மேலும் படிக்க | வரலாறு படைத்த இந்திய மகளிர் அணி... மக்களின் மனதை வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் - நச் தருணம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ