India National Cricket Team: உலகக் கோப்பை தொடருக்கு பின் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாடியது. அதில், இந்திய அணி 4-1 என்ற கணக்கில் தொடரை வென்று ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இதையடுத்து, உலகக் கோப்பை பின் முதல் வெளிநாட்டு தொடராக இந்திய அணி தற்போது தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதலில், சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்தியா அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. அதில், இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் தொடரை டிரா செய்ய கேஎல் ராகுல் தலைமையில் இந்திய அணி ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தியது.


தயாராகி வரும் இந்திய டெஸ்ட் அணி


இந்திய அணி ஒருநாள் தொடரை கைப்பற்றிய குதூகலத்துடன் தற்போது டெஸ்ட் தொடரை எதிர்நோக்கி காத்திருக்கிறது எனலாம். இந்திய அணி ரசிகர்களும் ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா ஆகியோர் மீண்டும் விளையாடுவதை காணவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்திய டெஸ்ட் அணி கடந்த வாரமே தென்னாப்பிரிக்கா வந்துவிட்ட நிலையில், தற்போது டெஸ்ட் தொடருக்கான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ராகுல் டிராவிட் தலைமையிலான பயிற்சியாளர்கள் குழுவும் டெஸ்ட் அணியோடு இருந்தே பயிற்சிகளை மேற்பார்வை செய்தது, ஒருநாள் தொடருக்கான அணியுடன் உடனிருக்கவில்லை.


மேலும் படிக்க | ஒருநாள் போட்டிகளில் ஒரே ஆண்டில் அதிக அரைசதங்கள் அடித்தவர்கள் யார் யார்?


கூடவே, ஷ்ரேயாஸ் ஐயரும் முதல் ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடினார். அதன்பின் அவர் டெஸ்ட் அணியுடன் இணைந்துகொண்டு பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இது ஒருபுறம் இருக்க நட்சத்திர வீரர் விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக நாடு திரும்பியுள்ளார் என கூறப்படுகிறது. இருப்பினும் அவர் டிச.26ஆம் தேதிக்கான முதல் டெஸ்ட் தொடரில் விளையாட மீண்டும் வந்துவிடுவார் எனவும் கூறப்படுகிறது. மேலும், நட்சத்திர பேட்டர் ருதுராஜ் கெயக்வாட்டுக்கும் விரலில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில், அவருக்கான மாற்று வீரர் கூடிய விரைவில் அறிவிக்கப்படவும் வாய்ப்புள்ளது. 


மன சோர்வில் இஷான் கிஷன்


அந்த வகையில், சில நாள்களுக்கு முன் தென்னாப்பிரிக்கா தொடருக்கான டெஸ்ட் அணியில் மாற்றம் ஏற்பட்டது. அதாவது முதலில் டெஸ்ட் அணியில் இஷான் கிஷன் இடம்பெற்றிருந்தார். ஆனால், கடந்த டிச.17ஆம் தேதி பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில், தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் இஷான் கிஷனுக்கு பதிலாக கேஎஸ் பரத் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டது. அவரின் தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் இந்திய அணியில் விடுவிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. 


இந்நிலையில், அவருக்கு மனரீதியிலான சோர்வு ஏற்பட்டதாகவும், எனவே அவர் பிசிசிஐயிடம் கோரிக்கை வைத்ததால்தான் அவர் டெஸ்ட் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, கடந்த ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக இந்திய அணிக்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருவதால் தனக்கு சற்று ஓய்வு வேண்டும் என இஷான் கிஷன் கேட்டதை அடுத்து அணி நிர்வாகம் தேர்வு குழுவுடன் கலந்துரையாடி அவருக்கான அனுமதியை அளித்ததாக தெரிகிறது. 


ஒரு போட்டியில் கூட விளையாடாத இஷான்


"தனக்கு மன சோர்வு இருப்பதாகவும், கிரிக்கெட்டில் இருந்து சிறிது ஓய்வு தேவைப்படுவதாகவும் அவர் அணி நிர்வாகத்திடம் தெரிவித்தார். அனைவரும் அதை ஒப்புக்கொண்டனர்" என பிசிசிஐ சார்ந்த ஒருவர் ஊடகம் ஒன்றில் தெரிவித்துள்ளார். இஷான் கிஷன் விக்கெட் கீப்பர் மட்டுமின்றி இடதுகை பேட்டர் என்பதால் டாப் ஆர்டரில் அவரின் தேவை அதிகமாகி உள்ளது. இருப்பினும், ஒருநாள் தொடரில் கேஎல் ராகுல், டி20இல் ஜித்தேஷ் சர்மா ஆகியோரும் விக்கெட் கீப்பிங்கில் சிறப்பாக செயல்படுகின்றனர். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இவர் இடம்பெற்றிருந்தாலும் ஜித்தேஷ் சர்மாதான் பிளேயிங் லெவனில் இடம்பிடித்தார். இஷான் கிஷன் ஒருநாள் அணியிலும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | 'மெதுவா போடு மச்சி...' இந்த வீரரிடம் தமிழில் பேசிய கேஎல் ராகுல்...!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ