India National Cricket Team: பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர் தற்போது பரபரப்பான சூழலில் நடைபெற்று வருகிறது. ரோஹித் சர்மா மீண்டும் அணிக்குள் வந்துள்ளார், ஹேசில்வுட் காயம் காரணமாக டாம் போலண்ட் ஆஸ்திரேலிய பிளேயிங் லெவனுக்குள் வர இருக்கிறார். அறிமுக வீரர்களை ஆஸ்திரேலியாவும் தனது ஸ்குவாடில் சேர்த்துக்கொண்டுள்ளது. முதல் போட்டி மட்டுமே நிறைவடைந்த நிலையில் இத்தொடருக்கு மேலும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்ட் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. வரும் டிச. 6ஆம் தேதி தொடங்கும் இந்த போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது. இந்த போட்டிக்கு முன் இந்திய அணி இரண்டு நாள்கள் பயிற்சி ஆட்டமாக ஆஸ்திரேலியாவின் Prime Minister's XI அணியுடன் மோதுகிறது. நேற்றைய முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. இன்றைய இரண்டாவம் நாள் ஆட்டத்தை இரு அணிகளும் தலா 50 ஓவர்கள் விளையாடும் என தெரிவிக்கப்பட்டது. 


பந்துவீச்சாளர்களுக்கு நல்ல பயிற்சி 


அந்த வகையில், இன்று டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவிசந்திரன் அஸ்வின் ஆகியோர் பந்துவீசாமல் மற்ற அனைவரும் இன்று பந்துவீசினர். சிராஜ் மற்றும் ஆகாஷ் தீப் முதல் ஸ்பெல்லை வீசினர். தொடர்ந்து, ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் அடுத்த ஸ்பெல்லை வீசினர். இறுதிக்கட்டத்தில் நிதிஷ்குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் பந்துவீசினர். 


மேலும் படிக்க | IND vs AUS 2nd Test : இந்திய அணியின் பிளேயிங் லெவனில் நடக்கும் 3 மிகப்பெரிய மாற்றங்கள்


தனது பந்துவீச்சாளர்களுக்கு பயிற்சியளிக்கும் வகையில், இந்திய அணி இன்றைய ஆட்டத்தை திட்டமிட்டது. இந்திய அணி 43.2 ஓவர்கள் பந்துவீசி 240 ரன்களுக்கு அந்த அணியை ஆல்-அவுட்டாகியது. Prime Minister's XI அணி சார்பாக அதிகபட்சமாக சாம் கோன்ஸ்டாஸ் 107 ரன்கள், ஹன்னோ ஜேக்கப்ஸ் 61 ரன்களை அடித்தனர். ஹர்ஷித் ராணா 4, ஆகாஷ் தீப் 2 மற்றும் சிராஜ், பிரசித் கிருஷ்ணா, வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.


தியாகம் செய்த ரோஹித்


இந்நிலையில், 46 ஓவர்களில் 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர்தான் ஓப்பனிங் இறங்கினர். ரோஹித் சர்மா ஓப்பனிங் இறங்குவாரா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் நான்காவது வீரராகதான் களமிறங்கினார். மூன்றாவது வீரராக சுப்மன் கில் களமிறங்கினார். அந்த வகையில், ரோஹித் சர்மா அடிலெய்ட் டெஸ்டின் போது நிச்சயம் 5ஆவது இடத்தில் இறங்குவார் என பேசப்படுகிறது. கேஎல் ராகுல் கடந்த போட்டியை போன்று இன்றைய போட்டியிலும் நிலைத்துநின்று விளையாடினார். 


ஜெய்ஸ்வால் 45 ரன்களுக்கு அவுட்டாக அடுத்து கில் உள்ளே வந்தார். கேஎல் ராகுல் 44 பந்துகளில் 27 ரன்களை அடித்தபோது ரிட்டையர்ட் ஹர்ட் மூலம் வெளியேறினார். அப்போது ரோஹித் சர்மா உள்ளே வந்து 3 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ரோஹித் நிதானமாக காணப்பட்டாலும் நேர்த்தியற்ற ஷாட்டால் ஆட்டமிழந்தார். இதன்மூலம், ரோஹித் சர்மா டாப் ஆர்டரில் விளையாடி புதிய பந்தை சந்திப்பதற்கு பதில் விராட் கோலிக்கு பின்னர் நம்பர் 5இல் இறங்கலாம் என கூறப்படுகிறது. அதுவும் இந்திய அணிக்காக ரோஹித் சர்மா தனது ஓப்பனிங் ஸ்பாட்டை தியாகம் செய்வார் என கூறப்படுகிறது. 


ரோஹித் சர்மா நீண்டகாலமாக டெஸ்டில் நம்பர் 5 இடத்தில்தான் விளையாடி வந்தார். விராட் கோலியின் கேப்டன்ஸியில்தான் அவர் டெஸ்டிலும் ஓப்பனிங்கில் வந்தார். தற்போதைய அவரது அதிரடி அணுகுமுறை, உடற்தகுதி ஆகியவை ரோஹித் சர்மாவை நம்பர் 5 இடம் சரியாக இருக்காது என்றாலும் பொறுமையாக ஆடி ரன்கள் சேர்க்கும் துணிச்சல் ரோஹித் சர்மாவிடம் இருந்தால் அது பெரியளவில் கைக்கொடுக்கும்.


மேலும் படிக்க | ஆஸ்திரேலியா தொடரில் இருந்து முக்கிய வீரர் விலகல்! மாற்று வீரர் அறிவிப்பு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ