Cricket: தென்ஆப்பிரிக்கா தொடரில் இருந்து கேப்டன் ரோகித்சர்மா விலகல்?
தசைப்பிடிப்பு மற்றும் கைவிரலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து ரோகித் சர்மா விலகியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி வரும் 16 ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அந்த அணிக்கு எதிரான 3 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் மும்பையில் முகாமிட்டு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். டெஸ்ட் போட்டிக்கு முதன்முறையாக துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்ட ரோகித் சர்மாவும் (Rohit Sharma) பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.
ALSO READ | ’ரோகித் பெஸ்ட்’ பழைய பகையால் கோலியை சீண்டும் இந்திய முன்னாள் வீரர்!
அப்போது, எதிர்பாரதவிதமாக பந்து தாக்கியதில் அவரது கையில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதேபோல், ஏற்கனவே இருந்த தொடை தசைப் பிடிப்பால் அவதிப்பட்டு வந்த அவர், உடனடியாக ஸ்கேன் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். மருத்துவ பரிசோதனையின் முடிவில், காயத்தின் தன்மை அதிகமாக இருந்ததால் அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால், ரோகித் சர்மா தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க முடியாது என பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அவருக்கு மாற்று வீரராக பிரியாங் பஞ்சால் இந்திய டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
30 வயதான பிரியாங் பஞ்சால் உள்ளூர் முதல் தரப்போட்டிகளில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்த இந்திய ஏ அணிக்கு தலைமை தாங்கிய அவர், 96 ரன்களும் எடுத்தார். ரோகித் விலகலால் இந்திய டெஸ்ட் அணியில் அவருக்கு முதன்முறையாக வாய்ப்பு கிடைத்துள்ளது. ரோகித் தென்ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் விளையாடுவாரா? இல்லையா? என்பதை பிசிசிஐ அறிவிக்கவில்லை. காயத்தின் நிலையின் அடிப்படையில் அவர் விளையாடுவார். அவர் விளையாட முடியாமல் போனால் கே.எல்.ராகுல் ஒருநாள் போட்டிக்கு தலைமை தாங்க வாய்ப்புகள் உள்ளன.
ALSO READ | ஃபார்முக்கு வந்த ரஸ்ஸல் - மேக்ஸ்வெல்! BBL-ல் சரவெடி
ரோகித் ஷர்மா அண்மையில் தான் காயத்தில் இருந்து மீண்டு வந்தார். காயம் காரணமாக நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் பங்கேற்காமல் இருந்தார். துர்திஷ்டவசமாக, இப்போது தென் ஆப்பிரிக்கா தொடரிலும் விளையாடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR