IND vs BAN, Hardik Pandya: நடப்பு ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடரின் (ICC World Cup 2023) 17ஆவது லீக் போட்டியில் இந்தியா - வங்கதேசம் (India vs Bangladesh) ஆகிய அணிகள் இன்று மோதுகின்றன. போட்டி புனே நகரில் உள்ள மகாராஷ்டிர கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறுகிறது. போட்டியின் டாஸை வென்று வங்கதேசம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வலியில் துடித்த ஹர்திக் பாண்டியா


வங்கதேசத்தில் அவர்களின் கேப்டன் ஷகிப் விளையாடவில்லை, அவருக்கு பதில் நசூம் அகமது விளையாடுகிறார். டஸ்கின் அகமதுக்கு பதில் ஹசன் மஹ்மூத் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அந்த அணியின் ஓப்பனர்களாக தான்சித் அகமது - லிட்டன் தாஸ் ஆகியோர் களமிறங்கினர். 


அந்த வகையில், ஆட்டத்தின் ஒன்பதாவது ஓவரில், ஹர்திக் பாண்டியா (Hardik Pandya) தனது முதல் ஓவரை வீச வந்தார். அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் தொடக்க வீரர் லிட்டன் தாஸ் அதனை எதிர்கொண்டார். பந்து பேட்டரின் நேர் திசையில் நேராக பவுண்டரிக்கு சென்றது. அப்போது, ஹர்திக் பாண்டியா பந்தை தடுக்க முயன்ற போது, கால் தடுக்கி கீழே விழுந்தார். அவரின் இடது காலில் ஏதோ அசௌகரியத்தை உணர்ந்ததால் உடனே அணியின் பிஸியோதெரபிஸ்ட் அவருக்கு வந்து உதவினார். ஹர்திக் பாண்டியா வலியால் துடித்தார்.


மேலும் படிக்க | IND vs BAN: டாஸில் ட்விஸ்ட்... ஷகிப் அல் ஹாசன் கிடையாது - இந்தியா மீண்டும் சேஸிங்!



இருப்பினும் ஹர்திக் பாண்டியா ஒரு கட்டத்தில் பந்துவீச முடியும் என்று எழுந்தார். ஆனால், கேப்டன் ரோஹித் மற்றும் விராட் கோலி (Virat Kohli) அவரை பெவிலியனில் சென்று அமரும்படி அறிவுறுத்த அவர் களத்தில் இருந்து வெளியேறினார். மீதம் இருந்த மூன்று பந்தையும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி பார்வையாளர்களின் ஆராவரத்தின் மத்தியில் அந்த மூன்று பந்துகளையும் வீசினார். அதில் அவர் 2 ரன்களை மட்டும் கொடுத்தார். 


இந்தியா பந்துவீச்சில் இனி ஷர்துல் தாக்கூரை (Shardul Thakur) நம்ப வேண்டியதாக உள்ளது. அவர் 9 ஓவர்களை வீசியாக வேண்டும் என தெரிகிறது. அவர் எப்படி இந்த போட்டியில் செயல்படுகிறார் என்பது இதில் கவனிக்கப்படும். முதல் 5 ஓவர்களில் அந்த அணி 10 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. ஆனால் அடுத்த 5 ஓவர்களில் 53 ரன்களை குவித்தது. அதன்படி வங்கேதச அணி 10 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 63 ரன்களை எடுத்தது.


ஹர்திக் பாண்டியா மீண்டும் பந்துவீச வருவாரா அல்லது அவருக்கு தொடர்ந்து ஓய்வளிக்கப்படுமா என்பது குறித்த அப்டேட் வெளியாகவில்லை. இதனால், ஒருவேளை அவர் அடுத்த சில போட்டிகளை தவறவிட்டால் ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் சூர்யகுமார் யாதவும், ஷர்துலுக்கு பதில் ஷமியும் களமிறக்கப்படலாம். சூர்யகுமார் பேட்டிங்கிற்கும், 10 ஓவர்களை வீச ஷமியும் ஏதுவாக இருப்பார்கள் என கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | உலக கோப்பை: 8 முறை இந்திய அணியை சம்பவம் செய்திருக்கும் வங்கதேசம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ