`சேப்பாக்கம் இப்போது சிஎஸ்கேவின் கோட்டை இல்லை...` முன்னாள் சென்னை வீரர் - காரணம் என்ன?
IPL 2024: சேப்பாக்கம் மைதானம் தற்போது சிஎஸ்கே அணியின் கோட்டை இல்லை என அந்த அணியின் முன்னாள் வீரர் கருத்து தெரிவித்துள்ளார். அது ஏன் என்பது குறித்து இதில் முழுமையாக காணலாம்.
IPL 2024, Chennai Super Kings: 17ஆவது ஐபிஎல் சீசன் (IPL 2024) மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் சூழலில், இந்தாண்டு தொடருக்கான முதல் கட்ட அட்டவணையானது நேற்று (பிப். 22) வெளியிடப்பட்டது. அதாவது, முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணை மட்டுமே தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் மக்களவை தேர்தலும் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் என்பதால், அறிவிக்கப்பட்ட போட்டிகளுக்கு பின் மீதம் உள்ள போட்டிகள், இந்தியாவிலேயே நடைபெறுமா அல்லது வெளிநாட்டில் நடைபெறுமா என்றே கேள்வியும் எழுந்துள்ளது. ஒருவேளை, லீக் சுற்றில் மீதம் உள்ள போட்டிகள் வெளிநாட்டிலும், பிளே ஆப் போட்டிகள் மீண்டும் இந்தியாவிலேயே நடைபெறும் என கூறப்படுகிறது.
முதல் போட்டியே ஃபயர் தான்...
இருப்பினும், ஐபிஎல் தொடரின் மீதம் உள்ள போட்டிகளுக்கான அட்டவணை (IPL 2024 Schedule) மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர்தான் முடிவு செய்யப்படும் என தெரிகிறது. அதன் பின்னர்தான், போட்டிகள் எங்கெங்கு நடைபெறும் என்பது உறுதியாகும். குறிப்பாக, தற்போது அறிவிக்கப்பட்ட அட்டவணையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி தனது டெல்லியில் ஒரு போட்டியை கூட விளையாடவில்லை. டெல்லி அணியின் முதல் 5 போட்டிகளும், மொஹாலி, ஜெய்ப்பூர், விசாகப்பட்டினம், மும்பை ஆகிய நகரங்களில் விளையாட உள்ளது.
மறுப்புறம், நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணி முதல் நான்கு போட்டிகளில், சேப்பாக்கத்தில் முதலிரண்டு போட்டிகளையும், அடுத்த 2 போட்டிகளை விசாகப்பட்டினம், ஹைதராபாத் நகரங்களில் விளையாடுகிறது. குறிப்பாக, இந்த சீசனின் முதல் போட்டியிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பலப்பரீட்டை நடத்துகின்றன.
சென்னை ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்...
சேப்பாக்கத்தில் (Chepauk Stadium) தோனியின் என்ட்ரியை காண ரசிகர்கள் ஆர்ப்பரித்து வரும் நிலையில், ஆர்சிபிக்கும், சேப்பாகத்திற்கும் செல்லப்பிள்ளைகளான டூ பிளேசிஸ் மற்றும் விராட் கோலி (Virat Kohli) ஆகியோரையும் முதல் போட்டியிலேயே தரிசிக்கலாம் என்பதால் சேப்பாக்க ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் எனலாம். இருப்பினும், இப்போதிருந்தே சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி ரசிகர்களுக்கு இடையே இணைய மோதல்கள் தொடங்கிவிட்டன எனலாம்.
தனது முதல் கோப்பையை இந்த முறையாவது முத்தமிட்டாக வேண்டும் என ஆர்சிபியும், தோனியின் (MS Dhoni) கடைசி தொடரையும் கோப்பையுடன் நிறைவு செய்ய வேண்டும் என சிஎஸ்கேவும் ஒரு முடிவோடுதான் இந்த சீசனை எதிர்கொள்ள உள்ளன. எனவே, முதல் போட்டியில் இருந்தே ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பது இரு அணியின் நோக்கமாக இருக்கும். அந்த வகையில், முதல் போட்டியில் வெற்றி பெற யாருக்கு அதிக வாய்ப்புள்ளது என்ற பேச்சுகளும் தற்போது தொடங்கிவிட்டன எனலாம்.
சேப்பாக்கம் சிஎஸ்கேவின் கோட்டை இல்லை...
இந்நிலையில், ஜியோ சினிமாஸ் சேனலில் ஐபிஎல் அட்டவணை வெளியிடை முன்னிட்டு நடத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியில், சிஎஸ்கே - ஆர்சிபி (Royal Challengers Bangalore) போட்டி குறித்து முன்னாள் சிஎஸ்கே மற்றும் இந்திய வீரருமான அபினவ் முகுந்த் பேசுகையில்,"சிஎஸ்கே - ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான போட்டிகள் பல ஆண்டுகளாக பெரும் எதிர்பார்ப்புடன் இருந்துள்ளது. குறிப்பாக, சேப்பாக்கத்தில் வெற்றியை நம்பமுடியாத அளவிற்கு ஆர்சிபி நெருங்கிவிட்டது, ஆனால் அந்த அணியால் வெற்றியை பதிவு செய்ய முடியவில்லை.
இந்த இரண்டு தருணங்கள் ரசிகர்களின் இதயங்களில் நிலையாக இருக்கும் எனலாம். ஆர்சிபி (RCB) அணிக்கு நல்ல விஷயம் என்னவென்றால், சென்னையில் ஆடுகளங்கள் தற்போது மாறிவிட்டன. சிஎஸ்கே அணியின் கோட்டையாக சேப்பாக்கம் இப்போது இல்லை.
கடந்த சீசனில் கோப்பையை வென்றாலும் பஞ்சாப் கிங்ஸ், மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உள்ளிட்ட அணிகளிடம் சேப்பாக்கத்தில் சிஎஸ்கே (CSK) தோல்வியை தழுவியது. ஆனால், சுழற்பந்து வீச்சுக்கு ஏற்ற சூழ்நிலையும், சிஎஸ்கேவிடம் உள்ள சுழற்பந்துவீச்சாளர்களையும் பார்க்கும்போது, பார்க்கும்போது அந்த அணி வலுவான அணியாக உள்ளது எனலாம்" என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ