India vs New Zealand: நியூசிலாந்து அணி இந்திய அணியை மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் வீழ்த்தி தொடரை வைட்வாஷ் செய்தது. மூன்று அல்லது அதற்கு அதிகமான போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி இந்தியாவில் வைட்வாஷ் ஆகி 41 ஆண்டுகள் ஆகிறது. கடைசியாக 6 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மேற்கு இந்திய தீவுகள் அணி, இந்தியாவை அதன் சொந்த மண்ணில் 0-3 என்ற கணக்கில் வீழ்த்தியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடைசியாக சொந்த மண்ணில் இந்திய அணி 2000ஆம் ஆண்டில் சச்சின் டெண்டுல்கர் தலைமையில் 0-2 என்ற கணக்கில் வைட்வாஷ் ஆகியிருந்தது. இங்கிலாந்து (4), ஆஸ்திரேலியா (3), வெஸ்ட் இண்டீஸ் (ஒருமுறை) என இந்த மூன்று அணிகளுக்குப் பிறகு 3 அல்லது அதற்கு மேலான போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியாவை ஒயிட்வாஷ் செய்த நான்காவது அணி என்ற பெருமையை நியூசிலாந்து தற்போது பெற்றுள்ளது. ஒரு தொடரில் மொத்த போட்டியையும் இழந்தது இதுதான் முதல்முறை என்றும் கூறப்படுகிறது.


WTC Final வாய்ப்பு?


கம்பீர் பொறுப்பேற்ற பின்னர் இந்தியா சில உயரங்களை தொட்டாலும், தொடர் சருக்கல்களையும் சந்தித்து வருகிறது. இலங்கைக்கு எதிராக  27 ஆண்டுகளுக்கு பிறகு ஓடிஐ தொடரை இந்தியா இழந்தது. தற்போது சொந்த மண்ணிலேயே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுவதுமாக இழந்திருப்பது கம்பீர் - ரோஹித் இணையருக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கும். இந்த படுதோல்வியில் இருந்து இந்தியா எப்படி மீளப்போகிறது என்பது ஒருபுறம் இருக்க உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வாய்ப்பு இந்தியாவுக்கு இன்னும் விலகிப்போயுள்ளது. 


மேலும் படிக்க | ஆஸ்திரேலியாவிலும் சேட்டை செய்த பிரபல இந்திய வீரர்... கடுப்பான அம்பயர் - நடவடிக்கை பாயுமா?


இந்திய அணிக்கு இன்னும் ஆஸ்திரேலியாவில் பார்டர் - கவாஸ்கர் கோப்பையில் 5 போட்டிகள் மட்டுமே மீதம் இருக்கிறது. இதில் நான்கு போட்டிகளை வென்று, ஒரு போட்டியை டிரா செய்தால் மட்டுமே மற்ற அணிகளின் வெற்றி, தோல்விகள் பார்க்காமல் நேரடியாக இந்தியாவால் WTC இறுதிப்போட்டிக்கு தகுதிபெற முடியும். ஆஸ்திரேலியாவில் கடந்த இரண்டு முறையும் இந்தியா தொடரை வென்றாலும் கூட 4-0 என்ற கணக்கில் வெல்வது என்பது இயலாத காரியம் எனலாம். நியூசிலாந்து இந்தியாவை தற்போது வீழ்த்தியது போல் இந்தியா அங்கு செயல்பட வேண்டும். 


இன்றைய கடைசி இன்னிங்ஸில் வெறும் 147 ரன்கள் மட்டுமே இலக்காக இருந்தாலும், ரிஷப் பண்டை தவிர மற்ற அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ரோஹித், விராட், கோலி, ஜெய்ஸ்வால், சர்ஃபராஸ் கான் உள்ளிட்டோரின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்தது, போட்டியை நியூசிலாந்து பக்கம் திருப்பியது. ரிஷப் பண்ட் 64 ரன்களில் இருந்தபோது சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். 



சர்ச்சையான முறையில் வெளியான ரிஷப் பண்ட்?


ஒருவேளை அது ரிஷப் பண்ட்டுக்கு சாதகமாக அமைந்திருந்தால் நிச்சயம் இந்தியா போட்டியை வென்றிருக்கும் எனலாம். ஆனால், அந்த அதிர்ஷ்டம் இந்தியாவுக்கும், பண்டுக்கும் கிடைக்கவில்லை. தற்போது இந்தியாவின் படுதோல்வியால் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் இந்திய அணி மீது கடும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அந்த விமர்சனங்களுக்கு காது கொடுத்து கம்பீர் தனது அணியை உருமாற்றவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.  


மேலும் படிக்க | IND vs AUS: ரோஹித்துக்கு மாற்று இவர் தானா...??? அபிமன்யூ, ருதுராஜ் இடத்திற்கு வரும் பெரிய ஆப்பு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ