Gautam Gambhir Virat Kohli: ஐசிசி டி20 உலகக் கோப்பையை கைப்பற்றிய பின்னர், இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. அதை தொடர்ந்து, இம்மாத இறுதியில் இலங்கைக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜூலை 27ஆம் தேதி தொடங்கி வரும் ஆக. 7ஆம் தேதி வரை மூன்று டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஓடிஐ போட்டிகளில் இந்தியா - இலங்கை அணி மோதுகின்றன. டி20 உலகக் கோப்பைக்கு பின் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஓய்வை அறிவித்ததை தொடர்ந்து, இந்த சுற்றுப்பயணம் அதிகம் கவனம் பெற்றது. அதுமட்டுமின்றி, அடுத்தாண்டு பிப்ரவரியில் சாம்பியன்ஸ் லீக் தொடரும் நடைபெறுவதால் ஓடிஐ தொடர் மீதும் எதிர்பார்ப்பு எழுந்தது. 


கம்பீர் செய்தியாளர் சந்திப்பு


டி20 உலகக் கோப்பை தொடருக்கு பிறகு ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளர் பதவிக்காலம் நிறைவடைந்தது. இதன்பின்னர், தற்போது கௌதம் கம்பீர் பிசிசிஐயால் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதை அடுத்து இந்திய அணியின் முதல் சுற்றுப்பயணம் இதுவாகும். கௌதம் கம்பீரின் செயல்பாடுகளை எதிர்பார்த்து கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | ருதுராஜ், ரிங்குகுக்கு நடிகைகளோடு தொடர்பு இருந்தால் இந்திய அணியில் இடம் கிடைத்திருக்கும் - பத்ரிநாத்


இந்நிலையில், இந்திய ஆடவர் சீனியர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் (Gautam Gambhir Press Meet) பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக இன்று செய்தியாளர்களை சந்தித்தார். மும்பையில் நடந்த இந்த செய்தியாளர் சந்திப்பில் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கரும் (Agit Agarkar) பங்கேற்றார்.



விராட் கோலி உடனான உறவு


இந்த செய்தியாளர் சந்திப்பில் ஹர்திக்கிற்கு கேப்டன்ஸி பொறுப்பு வழங்காதது குறித்தும், ருதுராஜ் - அபிஷேக் போன்றோரை டி20 தொடருக்கு தேர்வு செய்தது குறித்தும், இந்திய அணியில் விராட் கோலி - ரோஹித் சர்மா எதிர்காலம் குறித்தும், கில்லுக்கு கொடுக்கப்பட்ட கேப்டன்ஸி குறித்தும் என பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. அதில் கௌதம் கம்பீரிடம், தாங்களுக்கும் விராட் கோலிக்கும்  (Virat Kohli) எனக்கும் இடையிலான உறவு எப்படி இருக்கிறது என கேள்வியும் எழுப்பப்பட்டது. 


அதற்கு பதிலளித்த அவர்,"விராட் கோலியுடனான தனது உறவு என்பது டிஆர்பிக்கானது இல்லை. இந்த காலகட்டத்தில், நாங்கள் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி செயல்பட உள்ளோம். நாங்கள் 140 கோடி இந்தியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறோம். அவருடன் களத்திற்கு வெளியே நான் சிறந்த சிறப்பான உறவைக் கொண்டுள்ளேன். ஆனால், அது பொது வெளியில் பேசப்பட வேண்டியது அல்ல. விளையாடும் போதும், போட்டிகளுக்கு பின்னும் நான் அவருடன் எந்த வகையில் உரையாடலை வைத்துக்கொள்வதே முக்கியமாகும். அவர் ஒரு முழுமையான தொழில்முறை வீரர். குறிப்பாக உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு வீரர். அதையே அவர் தொடர்வார் என்றும் நம்புகிறேன்" என பதில் அளித்தார்.


ஓடிஐயில் விராட் கோலி


விராட் கோலி தற்போது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில், இலங்கை அணிக்கு எதிரான ஓடிஐ அணியில் அவர் இடம்பிடித்துள்ளார். ஆக. 2, 4, 7 ஆகிய நாள்களில் மூன்று ஓடிஐ போட்டிகள் நடைபெறுகின்றன. முன்னதாக ஜூலை 27, 28, 30 ஆகிய நாள்களில் மூன்று டி20 போட்டிகள் நடைபெற உள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | இந்த நடிகையை டேட்டிங் செய்கிறாரா ஹர்திக் பாண்டியா? வைரல் நடனமும், லேட்டஸ்ட் அப்டேட்டும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ